இந்த நூலினை படிக்கும் போது இராஜேந்திர சோழனில் ஆரம்பித்து பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இசைஞானி இளையராஜா எனும் ஆளுமைகளைக் கொண்டாடி, அவரது கல்லூரிக் கால நட்புகளைத் தொட்டு உள்ளூர் பூசாரி வரை அவரது எழுதுகோல் பல எல்லைகளை தாண்டிச் சென்று மண்ணோடும், மனிதர்களோடும் உறவாடியிருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள இயலும்.
அவரது எழுத்துக்கள், சமுதாய நலனுக்குத் தொண்டாற்றி இருக்கின்றன. இளையோருக்கு வழிகாட்டி இருக்கின்றன. அதே வேளையில் பேரறிஞர் அண்ணா தனது ஓட்டுநருக்கு ஓய்வு தரவேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு அவரை இருத்தித் தான் வண்டியை ஓட்டி வந்த, பெரிதும் அறியப்படாத ஒரு தகவலை அனாயசமாக சொல்லிச் செல்கின்றன.
கல்கியின் “பொன்னின் செல்வனும் “, உ.வே.சா.வின் “என் சரித்திரமும் ” எனக்கு அறிமுகப்படுத்திய நடுநாட்டின் நிலப்பரப்பை, அதன் வாழ்வியலை, இன்னோரு கோணத்தில் சிவசங்கரின் எழுத்துக்கள் எனக்குத் தெரிவிக்கின்றன.
அவரது இசை ஆர்வம், பொதுத் தொண்டு, சமூகப்பணிகள், ரசனை எல்லாவற்றிலும் மேலாக எங்கோ மதுரையில் ஒரு சாலையோர இட்லிக்கடையில் ஒரு முன்னிரவில்; சந்தித்த அய்யனார் என்ற வேலையாளும் வாழ்வின் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என எழும் அவரது சமூகப் பிரக்ஞை என இந்த நூலின் பரிமாணங்களை நான் விவரித்துக் கொண்டே செல்லலாம். விரிக்கிற் பெருகும்.
நூலினைப் படிக்கும் போது நான் பெற்ற இன்ப உணர்வை நீங்களும் பெறுவீர்கள் என்பது திண்ணம். படித்துவிட்டுச் சொல்லுங்கள். உங்களுக்காக இறுதி அத்தியாயத்தில் நானும் காத்திருக்கிறேன்.
– தங்கம் தென்னரசு

 மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)						 13 மாத பி.ஜே.பி ஆட்சி
13 மாத பி.ஜே.பி ஆட்சி						 2600 + வேதியியல் குவிஸ்
2600 + வேதியியல் குவிஸ்						 21 ம் விளிம்பு
21 ம் விளிம்பு						 1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்						 2800 + Physics Quiz
2800 + Physics Quiz						 ARYA MAYA - The Aryan Illusion
ARYA MAYA - The Aryan Illusion						 Bastion
Bastion						 Caste and Religion
Caste and Religion						 Compact DICTIONARY Spl Edition
Compact DICTIONARY Spl Edition						 Quiz on Computer & I.T.
Quiz on Computer & I.T.						 108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)						 Mother
Mother						
Reviews
There are no reviews yet.