Be the first to review “என் சமையலறையில்”
You must be logged in to post a review.
Original price was: ₹135.00.₹130.00Current price is: ₹130.00.
உடல் வளர்த்தேன்…உயிர் வளர்த்தேனே.. என்கிறார் திருமூலர். உயிர் தங்கியுள்ள உடல் பிரதானம் என்பதால் இவ்வாறு சொல்கிறார் அவர். உயிரைத் தாங்கும் உடலுக்கு வலு சேர்ப்பது எவ்வாறு? உணவே மருந்து… உணவே மருத்துவர். ஆம். நம் சமையலறை நமக்கு வழிகாட்டுகிறது. நம் உடலைப் போற்றிட.. உயிரை வளர்த்திட உதவுகிறது. எப்படி? நாம் அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே அவற்றை ஊட்டச்சத்தாக உண்பது எப்படி என்பதை இந்த நூல் நமக்கு விவரிக்கிறது. நாம் தினந்தோறும் உணவில் பயன்படுத்தும் கொத்தமல்லி, சமைத்த உணவுகளை அழகுபடுத்த, அலங்காரம் செய்ய மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் கொத்தமல்லி ஒரு மூலிகை. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளை கொத்தமல்லி தடுக்கிறது. மேலும் முக்கியமாக, கொத்தமல்லி ஆரோக்கியமான கொழுப்பு அளவுகளை (HDL) உயர்த்த உதவுகிறது, கொத்தமல்லியின் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றான ‘சிட்ரோன்னிலல்’ ஒரு சிறந்த கிருமி நாசினி, நுண்ணுயிர்க் கொல்லி, இது வாய் புண்களை வேகமாக ஆற்ற உதவுகிறது. இதைப்போன்று புதினா, கறிவேப்பிலை போன்றவைகளை சமையலில் எந்தெந்த விதத்தில் சேர்க்கலாம்? எப்படி சாப்பிடலாம்? என்பதை விளக்குகிறார் நூலாசிரியர். இதுமட்டுமல்ல, மாம்பழத்தை எப்படி சமையலில் உணவாக பயன்படுத்துவது? அதன் சத்துக்களை முழுமையாகப் பெறுவது எப்படி? என்பன போன்ற உணவு வகைகள் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை தரும் நன்மைகள் பல. வெந்தயம் குறிப்பாக, LDL என்ற கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதிலுள்ள ‘ஸ்டீராய்ட் சபோனின்’ ரத்தம் கொழுப்பை உறிஞ்சிக்கொள்வதை தடுக்கிறது. இதில் அதிகமாக உள்ள பொட்டாசியம் உடலில் சோடியம் செயல்திறனைக் குறைப்பதன் மூலம் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது என்பன போன்ற 60 ஆரோக்கியமான ரெசிபிக்களை அள்ளித் தந்திருக்கிறார் நூலாசிரியர். ஆயிரம் பிறைகண்டு ஆரோக்கியமாக வாழ… உங்கள் சமையலறைக்கு சக்தி கொடுக்க பக்கத்தைப் புரட்டுங்கள்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.