ESHTA SIDTHI THARUM UPASANA MANDHIRANGAL
ஆழ்வார்களும் – நாயன்மார்களும்கூட அவரவர் பகவானை ஆச்ரயித்து – உபாஸனை செய்து மோக்ஷ நிலை பெற்று இன்றும் புகழ் பெயரோடு நிலை நிற்கிறார்கள். அவ்வளவு ஏன்? காளிதாஸன் போன்ற பெரும் புலவர்களும் சங்கரர் – மத்வர் – ராமானுஜர் போன்ற பல ஆசார்யர்களும் தங்கள் தங்கள் தெய்வத்தை உபாஸித்துப் பெரிய பெரிய மஹான்களாகவும் ஞானிகளாகவும் – மேதைகளாகவும் திகழ்கிறார்கள் என்றால் இந்த உபாஸனா மார்க்கம் எவ்வளவு சிறப்புடையது? எவ்வளவு அவசியமானது – எவ்வளவு முக்கியமானது என்பது புலனாகும். இந்த உபாஸனையை யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு அவரவர்களுக்குப் பிடித்தமான – விருப்பமான தெய்வத்தைக் குறித்து எண்ணி உபாஸனை செய்யலாம்.
Reviews
There are no reviews yet.