புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
No products in the cart.
₹177.00 Original price was: ₹177.00.₹170.00Current price is: ₹170.00.
Delivery: Items will be delivered within 2-7 days
Username or email address *
Password *
Remember me Log in
Lost your password?
Email address *
A link to set a new password will be sent to your email address.
Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our Privacy policy.
Register
Anthoniraj Perumalsamy –
நூல் =ஜென் தத்துவக்கதைகள்
ஆசிரியர் =குருஜி வாசுதேவ்
இந்நூலில் ஜென் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதோடு புத்தரின் சமகாலத்தவரான லாவோ -இட் -சு என்பவரின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. காஸ்யபரால் தோற்றுவிக்கப்பட்ட ஜென் பிரிவு கிழக்காசிய நாடுகளில் செல்வாக்குப்பெற்றது. ஜப்பானில் வளர்த்தெடுக்கப்பட்டது. அதுபோல லாவோ -இட் -சு வால் தோற்றுவிக்கப்பட்ட சிந்தனை மரபு தாவோயிசம் எனப்படுகிறது
“செய்ததோ சக்கரம் இருபத்திநான்கு ஆரக்கால்களுடன்
உபயோகிப்பதோ அதன் வெற்றிடத்தை
உருவானது களிமண்ணால் ஒரு பானை
உபயோகம் அதன் வெற்றிடத்தில்,
கதவும், ஜன்னல்களும் நாற்புறம் சுவருமாய் வீடு
வாழ்வதோ நடுவேயுள்ள வெற்றிடத்தில்,
இல்லாதது எதுவ அதனை உபயோகி
இருப்பது எதுவோ அதன் பலனை அனுபவி”
களிமண்ணால் செய்யப்பட்ட பானையில் அதனுள்ளிருக்கும் வெற்றிடமே பயன்படுகிறது,
நாலுபுரம் சுவரெழுப்பி கதவு, சன்னல் வைத்து வீடுகட்டுகிறோம், நாம் வசிப்பது அதன் வெற்றிடத்தில்தான்.
வெற்றிடம் கண்ணனுக்குத் தெரியாது. இறைவன் என்பதும் வெற்றிடமே. மனதின் உள்ளேயும் வெற்றிடமே, எனவே அதனை உபயோகி என்கிறார். எவ்வளவு அருமையான தத்துவம்.
“நிரம்பிய கிண்ணம் வழிகின்றது,
கூர்மை மேலும் மேலும் கூறானால் மழுங்குகிறது,
பொன்னும் வைரமும் பூட்டி வைப்பினும் பாதுகாப்பு ஏது?
செல்வம், சீர், சிறப்புடன் செருக்கும்
சரிவில் நம்மை சாய்க்கக் காத்துள்ளது,
கடமை முடிந்ததும் விலகி, நகர்ந்துவிடு
இதுவே இயற்கையின் மாறா உண்மை. ”
எதுவும் அளவு மீறும்போது அதுவே அபாயமாகிறது. கிண்ணம் நிறைய நீர் ஊற்றிய பின்னும் அதில் நீரூற்றினால் அது வழிந்து ஓடி வீணாகும். வெற்றிகளும், செல்வமும் ஆணவத்தை கூட்டும், அதிகம் உண்டால் அஜீரணமாகும், எல்லையை அறிவதுதான் விவேகம். எது உன் கடமையோ அதை முடித்ததும் நகர்ந்துவிடு.
வாழ்வியலின் தத்துவம் எவ்வளவு எளிதாகக்காட்டப்படுகிறது.
மனமே கேள்வியின் பிறப்பிடம். பதிலும் அங்கேயேதான் இருக்கிறது. மௌனம் மனதின் கதவுகளை விரியத்திறக்கிறது, அப்போது அங்கு நிறைந்திருந்த ஆரவாரங்கள், ஐயங்கள் ஆகியவை கூச்சலாக வெளியேறுகின்றன. அதன் பின் அங்கே விடை அமைதியாக மேடையேறுகிறது.
ஜென் வரிகள் போல, ஜென் சூத்திரங்கள் போல, ஜென் கவிகளும் புகழ்பெற்றவையே.
மானம் அவமானம், இன்பம் துன்பம், எல்லாவற்றையும் இயல்பாnக ஏற்று எதையும் தன்னோடு ஓட்டவிடாத தன்மையே ஜென்.
டெட்சுகன் என்னும் ஜென் அறிஞர் ஜென் சூத்திரங்கள் யாவும் சீன மொழியில் இருந்ததால் அதை ஜப்பானிய மொழிக்கு மாற்றுவதற்காக நிதி திரட்டினார், அப்போது வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்ற அந்த நீதியை செலவழித்தார், இரண்டாம் முறை நிதி திரட்டினார், அப்போதும் ஒரு பேரிடர்வந்ததும் மக்களுக்காக செலவழித்தார். மூன்றாவது முறையாக நிதி திரட்டி அந்த நூலை வெளியிட்டார், அப்போது அந்த விழாவிற்கு வந்த ஜென் குரு, “டெட்சுகன், இந்தப்புத்தகக்த்தின் மூன்றாவது பதிப்பை வெளியிட்டுள்ளார் “என்று குறிப்பிட்டார். கீதையில் கண்ணன் “ஞானத்திற்கு தவணையிடலாம், தருமத்திற்கு செய்யலாகாது “என்கிறார். உலகெங்கும் உள்ள பெரியோர்களின் சிந்தனையெல்லாம் மக்களின் துயர்துடைப்பதிலேயேதான் இருந்துள்ளது என்பது புரிகிறது.
கண்கள் குருடாகலாம், ஆனால் கருத்து குருடாகக்கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும் என்பதை உணர்ந்து கொண்டால் போதும். தன்னைப்போல் பிறரையும் நேசி.
எதனால் அளக்கிறோமோ அதனால்தான் நாமும் அளக்கப்படுகிறோம்.
கன்பூசியஸ் ஒரு சீன அறிஞர், தத்துவவாதி. அவரிடம் ஒரு நாள் அவருடைய சீடர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கேள்வி =அரசு அதிகாரி என்ற முறையில் என்னிடம் என்னென்ன குறைகள் இருக்கக்கூடாது?
பதில் =பாரபட்சம், அவசரப்பட்டு முடிவெடுத்தல், சுயநலம், பிடிவாதம் இவை கூடாது
கே =முன்னோர்களின் ஆவிக்கு எப்படி நாம் கடமையை செய்வது?
பதில் =உயிருடன் இருப்பவர்களுக்கு முதலில் உன் கடமைகளைச்செய், ஆவிகளை பிறகு கவனிக்கலாம்.
கேள்வி =ஆட்சி சிறப்படைய என்னென்ன தேவை?
பதில் =போதிய உணவு இருப்பு, ராணுவம், மக்களின் நம்பிக்கை.
கேள்வி =இதனில் ஏதேனும் ஒன்றை விடுவதாக இருந்தால் முதலில் எதை விடவேண்டும்?
பதில் =ராணுவம்
கேள்வி =இரண்டாவதாக எதை விடலாம்?
பதில் =உணவு இருப்பு
திகைத்துப்போன சீடர்களுக்கு குரு விளக்கம் சொன்னார். “உணவு இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளனர், ஆனால் அப்போதெல்லாம் மக்களுக்கு அரசின் மீதிருந்த நம்பிக்கை போய்விடவில்லை, மீண்டும் நாடு எழுந்தது. எனவே மக்களின் நம்பிக்கையே அரசின் முழுபலமாகும். வள்ளுவரும் இதை,
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்”.என்று குறிப்பிடுகிறார்.
இந்நூலில் ஏறக்குறைய எழுபத்தேழுக்கதைகள் உள்ளன. அறிவுபூர்வமானவை. வாசியுங்கள். புதிய வெளிச்சங்கள் கிடைக்கலாம்.
அன்புடன் =பெ. அந்தோணிராஜ்
தேனி.