India Puratchi Paadhai
இவ்வாறான தொலைநோக்கு இலக்கு தொழிலாளிவர்க்கம் மற்றும் விவசாயிகளிடையே ஒரு நெருக்கமான கூட்டணி அமைவதை அடிப்படையாகக் கொண்டது. அந்த கூட்டணியில் தொழிலாளிவர்க்க தலைமையின் அவசியம் உணரப்பட வேண்டும். இந்தக் கூட்டணி தொழிலாளிவர்க்கத்தின் முன் முயற்சியான நடவடிக்கைகளால் கட்டமைக்கப் படவேண்டும். இந்த நடவடிக்கைகள் விவசாயக் கோரிக்கைகளை முழுவதுமாக ஏற்றவையாக அமைய வேண்டும். விவசாயிகள் போராட்டங்களுக்கு தொழிலாளிவர்க்கத்தின் நேரடி ஆதரவு இருக்க வேண்டும். ஆர்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் வடிவில் இந்த ஆதரவு இருக்க வேண்டும். விவசாயக் போராட்டங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைமை வகிப்பதால் மட்டுமே தொழிலாளிவர்க்க தலைமை உணர்ந்து ஏற்றுகொள்ளப் படபோவதில்லை. விவசாயப் போராட்டங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தொழிலாளிவர்க்கத்தின் நேரடியான வெகுஜன நடவடிக்கைகள்தான் தொழிலாளிவர்க்கத் தலைமையை உணர்ந்து ஏற்கச் செய்யும்.
இதர அனைத்து வர்க்கங்களைவிட தொழிலாளிவர்த்தைத்தான் விவசாயிகள் தமது நண்பனாக மற்றும் கூட்டாளியாக எதிர்ப்பார்க்கின்றனர். பல தொழிலாளிகள் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் பல வகையில் விவசாயிகளுடன் உறவுக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தொழிலாளிவர்க்க நடவடிக்கைகள் தற்போதையப் விவசாயப் போராட்டங்களுக்கு உதவுபவயை மட்டுமல்ல. நமது தேசிய இயக்க வரலாறு எடுத்துக்காட்டுவதை போல் இந்த நடவடிக்கைகள் அக்கம் பக்கம் விவசாயிகளை ஊக்கப்படுத்தும். அவை விவசாயிகளை புரட்சிகர உணர்வுக் கொள்ளச் செய்து புதிய பகுதிகளில் விவசாயப் போராட்டங்கள் உருவாகி எழுச்சி பெற ஊக்கப்படுத்தும்.

சஞ்சாரம்
Carry on, but remember!
One Hundred Sangam - Love Poems 
Reviews
There are no reviews yet.