இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

ஒரு வாக்கிய மின்மினிக் கதைகள்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
My big book of ABC
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
வெ. சாமிநாத சர்மா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பிரதமன்
புகார் நகரத்துப் பெருவணிகன்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
Notes From The Gallows
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
சொலவடைகளும் சொன்னவர்களும்
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
சப்தங்கள்
பச்சைக் கனவு
காலங்களில் அது வசந்தம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
வாடிவாசல்
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
சிலிங்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
மாயப் பெரு நதி
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
மத்தவிலாசப் பிரகசனம்
ஸ்ரீ பகவன் நாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் திவ்ய மஹா சரிதம் மற்றும் பகவன் நாம மஹிமை
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
பாரதிதாசனும் நகரத்தூதனும்
தடம் பதித்த தாரகைகள்
திருக்குறள் ஆராய்ச்சி
அராஜகவாதமா? சோசலிசமா?
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
கயமை
தமிழக மகளிர்
உலகிற்கு சீனா ஏன் தேவை
மரபும் புதுமையும் பித்தமும்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
திருவாசகம் பதிக விளக்கம்
நவபாஷாணன்
அந்தரத்தில் பறக்கும் கொடி
அஞ்சும் மல்லிகை
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
சாவுக்கே சவால்
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சந்திரஹாரம்
ரப்பர்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
சாதனைகள் சாத்தியமே
வானில் விழுந்த கோடுகள்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
திருக்குறள் கலைஞர் உரை
காற்றின் உள்ளொலிகள்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
காதல் 
Reviews
There are no reviews yet.