காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?

Publisher:
Author:

300.00

காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?

300.00

எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சிக்கல் எனச் சொல்வது வழக்கம். இதன் பின்னணியாக இருப்பது காமஷ்மீர் பிரச்சனை. முடியரசுகளுக்கு உட்பட்ட பிற பகுதிகள் இந்தியக் குடியரசில் இணைக்கப்பட்டதற்கும் காஷ்மீர் இணைக்கபப்பட்டதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. சில வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தது. காஷ்மீர் மக்கள் மத்தியில் ஒரு வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் காஷ்மீர் சுதந்திரமாக இருப்பதா இல்லை இந்தியாவுடன் இணைவதா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று. அதுவரை காஷ்மீருக்கெனச் சில சிறப்புரிமைகள் வழங்கப்படும் என்பது மற்றது. எனினும் அப்படியான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படாததோடு, இந்தச் சிறப்புப்புரிமைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்ட நிலையில் அம் மக்கள் போராடத் தொடங்கினர். 1954 முதல் 1989 வரை அமைதி வழியில் நடந்த அம்மக்கள் போராட்டம் அதன் பின் ஆயுதப் போராட்டமாக மாறியது. எல்லைதாண்டிய பயங்கரவாதச் செயல்பாடுகளும் தொடங்கின. அதன் பின் எவ்வளவோ நடந்துவிட்டன.

இன்று காஷ்மீர் மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிறப்புரிமை நமது அரசியல் சட்டத்திலிருந்து முழுமையாகவே நீக்கப்பட்டுவிட்டது. இப் பின்னணியில் விரிவாக்கப்பட்ட இந்த மூன்றாம் பதிப்பு வெளிவருகிறது. இதன் முதல் பதிப்பு 2008 இல் வெளிவந்தது. காஷ்மீருக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த ஒரு குழுவில் இருந்த அ.மார்க்ஸ் தனது நேரடிக் கள ஆய்வு மற்றும் நூலாய்வுகளின் அடிப்படையில் எழுதிய இந்நூல் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட ஒன்று. ஒரு ஆய்வு நூலாக மட்டுமல்லாமல் நேரடிக் கள ஆய்வு மற்றும் பலரது நேர்காணல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டதால் ஓர் இலக்கியமாக வெளிப்போந்த நூல் இது.

இந்த மூன்றாம் பதிப்பு மேலும் நான்கு விரிவான கட்டுரைகளை உள்ளடக்கி புல்வாமா தாக்குதல் வரை காஷ்மீர் பிரச்சினையைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்கிறது. காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றி நடுநிலையுடன் எழுதப்பட்ட ஓர் ஆழமான கட்டுரையும் இதில் உண்டு. 

Delivery: Items will be delivered within 2-7 days