Madhu Vilakku Arasiyalum Varalarum
மதுவிலக்கை அமல்படுத்தும்போதும், ரத்து செய்யும்போதும் ஏற்படும் நேரடி, பக்க விளைவுகலைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கும் புத்தகம் இது. தமிழகத்தில் கடந்த எண்பத்தைந்து ஆண்டுகளாக விவாதத்தில் இருக்கும் விவகாரம் மதுவிலக்கு. இது சாத்தியமா, இல்லையா என்ற கோணத்தில் ஒருபக்கம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், மதுவிலக்கு தேவையா, இல்லையா என்பதை முதலில் முடிவு செய்வோம், அதன்பிறகு அடுத்தகட்டம் நோக்கி இயல்பாக நகரலாம் என்ற விவாதம் நகர்ந்துகொண்டிருக்கிறது. மதுவிலக்கை ராஜாஜி கையில் எடுத்தபோது நிலவிய சூழல், கருணாநிதி ஆட்சியில் ரத்தான மதுவிலக்கு, எம்.ஜி.ஆர். உருவாக்கிய டாஸ்மாக்,ஜெயலலிதா ஆட்சியில் அமலுக்கு வந்த டாஸ்மாக் நேரடி மதுபான விற்பனை , மதுவிலக்கு கோரி நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள் என்று மதுவிலக்கு விவகாரத்தின் அனைத்து பரிணாமங்கள் குறித்தும் துல்லியமான சித்திரத்தை வைக்கும் முக்கியமான பதிவு.
Reviews
There are no reviews yet.