NEERAMBAL
முகமும் பெயரும் அடையாளமும் அறியாமல் கங்காவின் கவிதைகளை முதலில் வாசித்தேன். சிங்கப்பூர் தங்க முனை விருதிற்குரிய போட்டியில் வாசிக்கக் கிட்டியவை கங்காவின் கவிதைகள்.சொற்செட்டும் புதிய படிமங்களும் புலம்பெயர்ந்தாலும் புலத்திலிருந்து இடையறாமல் தவிக்கச் செய்கின்ற நுண்ணுணர்வும் மாறிமாறி நெய்கிற கவிதைகள் அவருடையவை. ஊரும் உறவும் நகர வாழ்வில் எத்தகைய மாற்றங்களை அற்புதமாகவும் அழகாகவும் ஆனால் வலி மிகுந்ததாகவும் மாற்றுகின்றன என்பதை ஆழமான, அழகான கவிக்குரலுடன் கங்கா எம்மிடம் கொண்டுவருகிறார். கவிதைகளில் ஒலியும் எதிரொலியும் ஒன்றாகப் பின்னி வருகின்ற புதுமை அவர் கவிதைகளில் நிகழ்கிறது.
Reviews
There are no reviews yet.