3 reviews for பால்யகால சகி
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹100.00.₹99.00Current price is: ₹99.00.
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ -இன்னும் பெரிய ஒருவராக – ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான்.
– சுகுமாரன்
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
#பால்யகாலசகி
மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் எழுதியது
எழுதி வெளியிட்ட ஆண்டு 1944
ஆனால் நட்பும் காதலும் நேசமும் காலங்களுக்கு அடங்கியா கிடக்கின்றன?
கேரளாவின் ஒரு கிராம்த்தில் எதிரெதிர் வீட்டில் வசிக்கும் மஜீத்தும் சுகறாவும் சிறுவயதில் இருந்து பழகி வருகிறார்கள்.
மனிதன் எப்போது இருந்து எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறான்? எப்போது கனவுகளில் கோட்டை கட்ட துவங்குகிறான்? அந்த தனது கனவு கோட்டையில் யாரெல்லாம் இருக்க வேண்டுமென விரும்புகிறான்?
சிலவற்றை சொன்னால் புரியாது, அனுபவித்தால் மட்டுமே புரியும்.
பஷீரின் எழுத்துக்கள் அத்தகையவை, கிடைக்கும் அனைத்து பஷீரின் எழுத்துக்களையும் தவறாமல் வாசிக்க வேண்டும்.
Paalyakaala sagi
Mubarak –
மலையாள எழுத்தாளரான #வைக்கம்_முகமது_பஷீர் அவர்களின்
#பால்யகால_சகி தமிழில் குளச்சல் #மு_யூசுப்.
புத்தகம் படித்தது #Anybooks என்னும் செயலியில், நண்பரின் வாட்ஸ்ஆப் பதிவில் இருந்து ஆர்வம் உண்டானது.
முதல் முறையாக ஒரு மலையாள மொழிப்பெயர்ப்பு சிறுகதையை படித்திருக்கிறேன். புத்தகத்தின் முன் பகுயில் உள்ள புத்தகத் தலைப்பின் எழுத்து வடிவமே ஓரிரு நொடி நின்று ரசிக்க வைக்கிறது.
புத்தகத்தின் ஆரம்பத்திலேயே ஆசிரியர் மற்றும் மொழிப் பெயர்ப்பாளர் குறித்த விவரங்கள் இருக்கிறது. புத்தக ஆசிரியர் திரு வைக்கம் முகமது பஷீர் சுதந்திரபோராட்ட தியாகி, எனக்கு பிடித்த ஒரு வேலை என்று சொல்ல முடியாது ஆனால் வாழ்க்கை முறை என சொல்லலாம், “தேசாந்திரி” இத்தகைய வாழ்வை வாழ்ந்தவர்.
தேசாந்திரி என்பது சாதாரண சொல்லாக தெரியலாம். ஆனால் அப்படி வாழ்ந்தவர்களின் அனுபவம் ஆலமரம் போன்றது.
கதைக்குள்ள போயிடலாம், இல்லனா கடுப்பாயிடுவீங்க…!
கதை மொத்தம் 12 சிறு பிரிவாக உள்ளது. ஆரம்பமும் தெரியல முடிவும் தெரியல சீக்கிரம் முடிந்துவிட்டது. இதுவரை கண்டிராத வகையில் முழுக்க முழுக்க இஸ்லாமிய பின்புலத்தில் கதை பயணித்து முடிகிறது. ஆசிரியர் ஓர் இஸ்லாமியர், கதையில் இஸ்லாம் குறித்த குறிப்புகள் சரியே!
சிறுவயதில் சண்டையிட்டு கொள்ளும் ஏழை வீட்டு பெண் சுகறாவும் பணக்கார வீட்டு ஆண் மஜீத் இருவரது காதல் கதை தான் மொத்த நாவலும். இருவருக்குள்ளான விரோதம் எப்படி நட்பானது, அது எப்படி காதலானது என அழகாக தனித்த எழுத்து நடையில் ஆசிரியர் எழுதியுள்ளார்.
சாதாரணமாக மனிதனுக்கு எப்படி அவனறியால் காதல் பூக்கிறதோ, அதே போல கதையில் எந்த இடத்தில் காதல் ஆரம்பமானது என சொல்ல முடியாத வகையில் பிண்ணியிருக்கிறார்.
சுகறாவின் தந்தை இறப்பு, அவளது படிக்கும் ஆசை போன்ற இடங்களில் மனம் கனத்து கண்ணீர் ஊறுகிறது.
சுகறா, மஜீத்திற்கு முதல் முத்தம் கொடுக்கும் பகுதி மிக சிறிதானாலும் அந்த அளவிற்கு அழகாக உள்ளது. முதல் காதலில் முதல் முத்தம் பெற்றோருக்கு அந்த அருமை தெரியும்.
கதையின் எட்டாம் பாகத்தில் ஆசிரியர் கதாநாயகனை தேசாந்திரியாக ஆக்குகிறார். அவரது சொந்த அனுபவத்தை சிறிது தந்திருக்கிறார். பத்தாண்டு தேசாந்திரி வாழ்க்கை முடிந்து மஜீத் வீடு திரும்பும்போது எல்லாம் மாறியிருக்கிறது. எல்லாமும் ஏமாற்றம்.
பத்தாண்டுகளில் தனது குடும்பம் ஏழ்மையை அடைதல், சுகறா திருமணமாகி கணவன் வீட்டில் துன்புறுதல், அவளது உடல்நிலை மாற்றம் என கதை மொத்தமும் ஓர் அந்தகாரம் சூழ்ந்து கொள்கிறது.
சுகறாவை மணம் முடிக்கவும், தன் தங்கைகளுக்கு மணம் முடித்து வைக்கவும், வீட்டின் ஏழ்மையை போக்கவும் வெளியேறி மஜீத்திற்கு பல ஆயிரம் மைல் தூரத்தில் வேலை கிடைக்கிறது. இரண்டாம் மாதமே வாழ்க்கையில் பெரிய அடி.
அதிலிருந்து வெளியேறி ஓரளவு சமாளிக்கும் போது தன் காதலியின் நிலை குறித்த செய்தி. இப்படியாக கதை முடிகிறது.
புத்தகத்தின் இறுதி அட்டையில் புத்தக ஆசிரியர் தன் சொந்த அனுபவத்தையும் கதையில் கலந்திருப்பதாக செய்தி உள்ளது. அதை படித்ததும் ஒரு நிமிடம் பல எண்ணங்கள் ஓடுகிறது.
ஆசிரியர் முன்னுரையிலேயே கதை கொடூரமான சோகங்களை கொண்டுள்ளதென சொல்கிறார். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சறுக்கும் சாதாரண மனிதனின் வாழ்க்கை தான் இந்த “பால்யகால சகி” உடன் சிறிது இஸ்லாமிய வாழ்க்கை முறையை கலந்திருக்கிறார்.
சிறிய புத்தகம் தான், விரும்புவோர் படியுங்க! புத்தகம் நம் அனுபவத்தை கூட்டும் என்பது என் நம்பிக்கை. இந்த கதை ஒரு புதிய அனுபவத்தை அளித்துள்ளது.
-நன்றி
#muba
ART Nagarajan –
பால்யகால சகி
வைக்கம் முகமது பஷீர்
தமிழில் குளச்சல் மு.யூசுப்.
எல்லா நெருக்கடிகளையும் வெற்றிகரமாக கடந்து மணமேடையில்
பொண்ணு மாப்பிள்ளையாக பிரவேசிக்கும் கதைகளை
மட்டுமே வாசித்தவர்கள்,
இந்தக் கதையை வாசிக்கும் போது அதிர்ச்சியடையக்கூடும்.
வாழ்க்கை பாதையில்
சிறு பாதிப்பு ஏற்பட்டால்கூட
நாயகனும், நாயகியும்,
தற்கொலைக்கு முயலும் கதைகளையும்,
மாலை மாற்றிக்கொண்டு
விஷம் அருந்தும் காதலர் கதைகளையும் வாசித்துவிட்டு
மிக அருமையான கதைகள் என்று
தலையாட்டும் வாசகனுக்கு,
ஏமாற்றத்தையும்,
துன்பத்தையும்,
ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும்,
அதை எதிர்கொள்ளும் வலிமையான சிந்தனையையும் “பால்யகால சகி”
கற்றுத் தருகிறது!
துன்பங்களை் கடந்து வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை சமூகத்திற்கு உணர்த்துகிறது.
சொகறாவும், மஜீதும் எதார்த்த வாழ்வின் துன்பங்களை எப்படி கடந்து செல்கிறார்கள் என்பதை,
வைக்கம் முகமது பஷீர் அவர்கள் மழையாளத்தில் எழுதிய எழுத்துக்களை தமிழில்
குளச்சல் மு.யூசுப் அவர்கள்,
வாசிப்பாளனின் கண்ணீரையும் சேர்த்தே கதையோடு பிசைந்து தந்திருக்கிறார்!
உண்மையில்,
துன்பங்களினால் பெற்ற அனுபவம் நிரந்தரமானது
என்பது வாசிப்பில் எனக்கு தெளிவாகியது.
மரணத்தை விட கொடுமையான
சோக அனுபவங்களும் வாழ்க்கையில் உண்டு என்பதையும் அறிவுறுத்துவது “பால்யகால சகி”
ஒரு சமூகத்தின்
உள் மனதிற்குள் நுழைந்து செல்வதற்கான வழி படைப்பிலக்கியம் ஒன்றுதான்,
“பால்யகால சகி” சமூகத்தின் புரையோடிப் போன செய்திகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
29.01.2020 திங்கள்கிழமை நண்பர் குளச்சல் மு.யூசுப் அவர்கள் 2019ம் ஆண்டுக்கான தமிழக அரசின்
“மொழியாக்க விருதினை” பெறுகிறார்.
வாழ்த்துகள் நண்பரே!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்
புத்தக வாசல், மதுரை.