1 review for பள்ளிக்கூடத் தேர்தல்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹40.00
கனவு போன்றும் கற்பனை போலவும் மயக்கம் தரும் இதை நிஜப்படுத்திய அனுபவங்களைத்தான் ஒரு ஆசிரியரின் நேரடிக்குரலில் இந்நூல் விவரிக்கிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
அனைத்தும் / General
சீ.ப்பி. செல்வம் –
#யார்_நல்லாசிரியர்…?
தன்னுடைய வகுப்பறைக்கு நுழையும் ஒரு ஆசிரியரை வகுப்பறையில் இருக்கின்ற மாணவர்கள் அவரை எவ்வாறு பார்க்கிறார்கள்? எவ்வாறு மதிக்கிறார்கள்? எவ்வாறு போற்றுகிறார்கள்? எவ்வாறு ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்கள்? இன்னும் சொல்லப்போனால் அவர் எவ்வாறு நல்லாசிரியராக கொண்டாடப்படுகிறார்? என்ற பல்வேறு விஷயங்களை ஆய்வு நோக்கில் நமக்கு அற்புதமான ஒரு புத்தகமாக பேராசிரியர் நா.மணி அவர்கள் #பள்ளிக்கூடத்தேர்தல்_நல்லாசிரியர்களை_தேர்ந்தெடுத்த_மாணவர்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். உண்மையில் ஒரே மூச்சில் வாசிக்கக்கூடிய புத்தகம். எடுத்ததுடன் ஆர்வத்துடன் படித்து இறுதியாக நாம் எதை செய்திருக்கிறோம்? எதை செய்யவில்லை? எதை இனிமேல் செய்ய வேண்டும்? என நமக்குள்ளேயே பல சுயமான பல கேள்விகளையும், சுய விமர்சனங்களையும் ஆய்வு செய்ய வைக்கிறது இந்தப் புத்தகம். மாணவர்களுடைய ஒழுக்கம் சார்ந்த வெறும் அறிவுரைகளையும் மட்டுமே வழங்கி சென்றால் அவர் ஒரு நல்லாசிரியரா? அப்படி இல்லாமல் மாணவர்களுடைய நிலையறிந்து அவருடைய வாழ்க்கை பாதையை சரிப்படுத்த கூடிய ஆசிரியர் ஒரு நல்லாசிரியரா? இல்லை சமூகத்தில் நடக்கின்ற அவலங்களை துடைப்பதற்கு கல்வி ஒரு முக்கியமான கருதுகோள் என்று சொல்கிறவர் ஒரு நல்லாசிரியரா? தன்னுடைய மாணவர்கள் என்னவாக வேண்டும் என்று தன் விரலைப் பிடித்து அழைத்துச் செல்லக்கூடியவர் ஒரு நல்லாசிரியரா? இப்படி இன்னும் இன்னும் பல கேள்விகளை இந்தப் புத்தகம் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு மகத்தான ஆய்வு நூலாக நான் இந்த புத்தகத்தை பார்க்கிறேன் நண்பர்களே. கற்கும் பணியிலும் கற்பித்தல் பணியிலும் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கும் என்னைப்போல ஆசிரியர்கள் என்னோடு பயணித்து கொண்டிருக்கின்ற பல மாணவர்கள் இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். பாரதி புத்தகாலயம் தொடர்ச்சியாக இது போன்ற கல்வி வரிசை நூல்களை வெளியிட்டு கொண்டிருக்கிறது. அவற்றுள் இந்த புத்தகம் மிக முக்கியமான புத்தகமாக நான் கருதுகிறேன். இன்னும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடத்தில் இருக்கின்ற உறவுகளை மேம்படுத்துவதற்கு இது போன்ற புத்தகங்கள் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் மாணவர்களிடம் வெறும் அறிவுரையை பகர்தலோடு நில்லாமல், கற்பித்தல் பணி மட்டும் தான் என்று ஒரு குறுகிய வட்டாரத்தில் நாம் இல்லாமல் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு சுதந்திர தன்மையை ஏற்படுத்தி கொண்டு அவர்களுடைய நற்பண்புகளையும், மனித சமுதாயத்தைப் பற்றிய விசாலப் பார்வையையும் வளர்த்து வருங்காலத்தில் அவர்களை சூழ்ந்து கொள்ளும் சமூக பிரச்சினைகளுக்கும் அதற்கான தீர்வுகளையும் கையாளக்கூடிய ஒரு சிறந்த குடிமகனாக இந்த ஜனநாயக நாட்டில் வந்தாலே நாம் ஒரு நல்லாசிரியராக திகழ்வோம் என்பது இந்தப் புத்தகத்தை படித்துப் படித்து முடித்தவுடன் உணரமுடிகிறது நண்பர்களே. மிகச் சிறந்த ஆய்வு நூல். இதை எழுதிய மதிப்பிற்குரிய பேராசிரியர் நா.மணி அவர்களுக்கும், இந்த ஆய்வு நூலை ஒரு புத்தகமாக எல்லோர் கரங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற மகத்தான பணியை செய்த பாரதி புத்தகாலயத்திற்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்…
நூலின் பெயர்: பள்ளிக்கூடத்தேர்தல் – நல்லாசிரியர்கள் தேர்ந்தெடுத்த மாணவர்கள்
ஆசிரியர்: பேராசிரியர் நா.மணி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்