1 review for பதின்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹360.00 Original price was: ₹360.00.₹340.00Current price is: ₹340.00.
ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழியைத் தானே தேடிக் கொள்கிறான். தனது எழுத்தின் வழியே பால்யத்தின் வெண்ணிற நினைவுகளை பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
kmkarthi kn –
#பதின்
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
சிறுவயது நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவதில் எந்த ஒரு சலிப்பும் யாருக்கும் வரவே போவதில்லை என்பது உண்மை. அதைத்தான் இந்த நாவல் செய்கிறது. துண்டு துண்டாய் ஞாபகத்தில் இருக்கும் நம் சிறுவயது சேட்டைகளை, குறும்பபுத்தனங்களை, அழுகையை, தண்டனைகளையெல்லாம் தொகுத்தெடுத்து புத்தகமமாய் மாற்றி நம் பால்யத்தை நம் கைகளிலேயே தவழ விட்டிருக்கிறது நாவல்.
இந்த நாவலில் பேசப்படும் நந்துவின் வாழ்க்கை முழுக்க முழுக்க நம் வாழ்க்கை. இன்னும் யதார்த்தமாக சொல்வதானால் யாவரும் இந்த நாவலில் கூறப்பட்டிருக்கிற சம்பவங்களை கடந்து வந்தவர்களாகவே இருப்பார்கள்.
என்னை என் பால்யத்துக்கே கூட்டிச் சென்ற காலயந்திரம் தான் இந்த நாவல். உண்மையிலேயே இதிலிருக்கும் பல செயல்களை நானும் செய்திருக்கிறேன்.
முதல் திருட்டு, கிழவர்களை வம்புக்கிழுப்பது, முயல் வளர்ப்பவர்களின் வீட்டில் தெரியாமல் நுழைவது, ஓணான் அடிப்பது, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காசு குடுக்காமல் ஓடி வந்ததுனு இன்னும் பல சம்பவங்களைச் சொல்லலாம். நந்துவின் வழியே என்னையே பார்க்கிறேன். நான் மட்டுமல்ல வாசிக்கும் அனைவரும் தங்களையே காண்பீர்கள். இது சவால்.
நந்துவின் நண்பன் சங்கர். எதையுமே வித்தியாசமாக சிந்திப்பவன். ஒரு நாள் பகலை அளக்கக் கிளம்புகிறார்கள். பகலை எப்படி அளப்பது, ஒரு நிலத்தை எப்படி அளக்கிறார்கள். அதற்கு அடி என்றஅளவை இருக்கிறது. அதுபோலவே அதிகாலை ஆரம்பித்தலிலிருது இருட்டு கட்டும் வரை காலடிகளாலே பகலை அளக்க முற்படுகிறார்கள். கடைசியில் பகல் எவ்வளவு பெருசு. நாற்பத்தியெட்டாயிரம் அடி பெருசு என அளந்தும் விடுகிறார்கள்.
மற்றொருநாள் சாலையில் கண்ணாடி அணிந்து வருபவர்களைக் கணக்கெடுக்கிறார்கள். ஆண் 65, பெண்18 ஆக இந்த ஆராய்ச்சியின் தீர்வென்பது ஆண்களே அதிகமாக கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். இதுபோல பல குறும்புத்தனமான சம்பவங்களால் நாவலை நிரப்பியிருக்கிறார்.
அதேசமயம் சிறுவர்களின் உலவியல் பிரச்சனைகளையும் ஆராய்ந்திருக்கிறார். சிறுவர்களின் குற்றச்சாட்டு “பெரியவர்களுக்கு எதைச் சொல்லியும் புரிய வைக்க முடியாது, அவர்கள் நாம் சொல்வதை காது கொடுத்து கேட்பதே இல்லை” உண்மைதானுங்களே நாம சின்னக் குழந்தைகளோட கருத்த என்னைக்காவது கேட்ருக்கோமா, அவுங்க பக்கத்து நியாயத்தை பேச விட்ருப்போமா, ஏதாவது கேள்வி கேட்டா சனியனே ச்சும்மா இருனு அடக்கி வைக்கிறது மட்டும் தானே செஞ்சிருக்கோம். அதேபோல அவுங்களுக்கு சரி எது தப்பு எதுனு விளக்காம அவங்கள ஒருவித பயத்தோடயே தானே வளத்து வந்துருக்கோம். அதுக்கு உதாரணமா இந்த நாவல்ல ஒரு பகுதி இருக்கு.
நந்து கடைக்கி போகும் போது அங்கிருக்கிற இளம்பெண்கள் நந்துவைக் கூப்பிட்டு, உங்கம்மாகிட்ட எத்தனை சேலை இருக்கு, தினமும் குளிப்பாங்களானு நெறையா கேள்வி கேக்கறாங்க. அதுக்கு நந்து பதிலேதும் சொல்லாம வீட்டுக்கு ஓடியாந்து அம்மாகிட்ட சொல்லிடறான். உடனே அம்மா அந்தத்தெரு கொமுரிக கூட சண்டைக்குப் போறாங்க. இதோட முடிஞ்சிருந்தா இது சரி. ஆனா உனக்கென்னடா இவுளுகளோட பேச்சுனு நம்ம நந்துவ போட்டும் அடிக்கறாங்க. இப்ப அடிவாங்கறதுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன்னு யோசிச்சான்னா அவனுக்கு என்ன பதில் கிடைக்கும். இத அம்மாகிட்ட சொன்னது தான் தப்புனு ஒரு முடிவுக்கு வருவான். இந்த மாதிரி தான் நாமளும் கொழம்பி குழந்தைகளையும் கொழப்பறோம்.
இந்த நாவல் இரண்டு விதமான பார்வைகளைக் கொண்டது. ஒன்று நாம் எல்லோருக்குள்ளும் மிச்சமிருக்கும் குழந்தமையை கிள்ளி விடுவது. இரண்டாவது நம் குழந்தைகளின் அக உலவியலை புரிந்து கொள்ளச் செய்வது.
இன்ன வயதினர் தான் வாசிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடுகளுமில்லாமல்
10 முதல் 100 வயதுவரை உள்ள எவரும் வாசிக்கலாம். எந்தத் தரப்பினர் வாசித்தாலும் அறிவை கழட்டி வைத்துவிட்டு வாசிக்கவில்லையென்றால் வறட்டு எழுத்துகளாகத்தான் தெரியும். மாறாக ஒரு பத்துவயது சிறுவனாக மாறி இத நீங்க வாசிச்சு பாருங்க கண்டிப்பாக ஒரு சில மாற்றங்களை உங்களுக்குள் நிகழ்த்தும்.
நாவலிலிருந்து ஒரு வரி:-
சர்வாதிகாரிகள் உலகிலிருந்து மறைந்து போயிருக்கலாம். ஆனால், வீட்டில் வாழத்தான் செய்கிறார்கள்.
இப்ப என்னோட கவலையெல்லாம் இந்த புத்தகத்த இரவல் வாங்கித்தான் படித்தேன். ஆனால் கட்டாயம் திருப்பி குடுக்கத்தான் வேணுமானு யோசிச்சிட்டு இருக்கேன். சுட்ருவமா..!!!
#Kmkarthikeyan_2020-35