ஆயிரம் அநீதிகளின் நிலைக்களனாக இருந்த, இன்றும் இருக்கும் இந்தியாவில்தான் அவரது இளமைக் காலப் பணி தொடங்கிற்று. சாதிகளில் முதல் மேல் சாதியாகக் கருதப்படுவதில் பிறந்த அவர், சாதி அமைப்பின் மீது கடுமையான போர் தொடுத்தார். “சாதி அமைப்பு இந்திய கலாச்சாரத்தின் கொடிய குற்றம்” என்பது கிருஷ்ணனின் அடிப்படையான கருத்து. அம்பேத்கர், காந்தி, நாராயண குரு, விவேகானந்தா, பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் சித்தாந்தங்களிலிருந்து வடித்தெடுத்த தனித்துவமான சித்தாந்தமே என்னுடையது என்கிறார் கிருஷ்ணன். அத்தகைய சித்தாந்தப் பார்வையும், இந்தியாவின் ஆயிரமாயிரம் சாதிகளும், அவற்றின் மாநில வேறுபாடுகளும் குறித்த அவரது பிரம்மாண்ட புரிதலும் இணைந்து, அவரது யுக்திகள் உருவாகின. வலிமையான சட்ட, அரசியல் சாசன அடிப்படையில் இந்த யுக்திகளையும், அவற்றின் நுணுக்கங்களையும் உருவாக்கியவர்.
நீதியின் மீதும், மனித உரிமைகள் மீதும், இந்திய அரசியல் சாசனத்தின் லட்சியக் கண்ணோட்டத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள், அனைத்து இந்தியர்களின் சமூக அளவிலான, பொருளாதார அளவிலான முன்னேற்றம் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்.
நலிந்த மக்களின் பிரச்சினைகளையும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதையும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கொள்கைகளையும் கற்பிக்கிற ஆசிரியர்களுக்கும், அவற்றை கற்கும் மாணவர்களுக்கும் இந்தப் புத்தகம் மிகவும் பயன்படும். இந்திய ஆட்சிப் பணி, நீதித் துறை உள்ளிட்ட அரசுப் பணிகளில் சேர்வோருக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்போது அதற்கான வழிகாட்டி புத்தகமாக இது கட்டாயம் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
காலகாலமாக இங்கே இயங்கி வந்திருக்கிற சமூகநீதி, அம்பேத்கரின் கருத்துகளின் வழியாக இந்தியாவின் தனித்தன்மையான ஜனநாயக வடிவமாக பரிணமித்து வருகிறது. அவற்றின் கிளைகள்தான் அரசியலிலும், கல்வியிலும், வேலையிலும்உள்ள இட ஒதுக்கீடுகள் எல்லாம்.
அடுக்கு நிலை ஏற்றதாழ்விலிருந்து பிறந்துகொண்டிருக்கிற ‘சமூகநீதி ஜனநாயகத்தைப்’ பின்னுக்குத் தள்ளுவதாக இன்றைய அரசியல் போக்கு உள்ளது. அதனைப் புரிந்துகொள்ளவும் எதிர்கொள்ளவும் இளைய தலைமுறையை இந்தப் புத்தகம் தயார்படுத்தும்.
Reviews
There are no reviews yet.