SIDDHARGALIN MOOLIGAIK KUDINEER MARUTHTHUVAM
தசை, நரம்பு, ரத்தம், எலும்பு, தோல் இவை மட்டுமே மனிதரில்லை. உடல், உயிர், மனம் ஆகிய கூட்டு ஆக்கமே மனிதர். இம் மூன்றின் – எது ஒன்றில் சுணக்கம் ஏற்பட்டாலும், அது நோயாகிறது. அந்நோய் தீர்க்க உதவும் வகையில் தான், குடிநீர், கஷாயம், தீ நீர், உந்நீர், திராவகம், சர்பத்துகள், போன்ற இனங்களினால் என்னென்ன மருந்தாக்கம் செய்யமுடியுமோ அத்தனையும் தயாரித்து உட்கொள்ளும் உபாயங்களை விளக்கியும்; உலைக்களம் போன்ற நோயின் உலகத்தில் அலைக் கழிக்கப்படாமல் வாழ்ந்திடவும், அழியக்கூடிய பரு உடலை அழியாத ஒளியுடலாக்கி நம் வாழ்க்கை பாதுகாக்கப்படவும் தனி ஞானம் மிக்க சித்தர்களின் இம்மருத்துவ முறைகளை ஏராளமான நூல்களை அறிந்தும், ஆய்வு செய்தும், அனுபவத்தைக் கொண்டும் “சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்”எனும் இந்நூல் அரியமுறையில் எழுதப் பெற்றுள்ளது
Reviews
There are no reviews yet.