SRI MAHA CHANDI YAAGA VIDHANAM
இந்த ப்ரஹ்ம சக்தியாலான இந்த வடிவ மாறுபாட்டை “ச்வேதாச்வதர உபநிஷத்” வேறு விதமாக அதாவது – இளஞ்சிவப்பு வெளுப்பு – கறுப்பு என்று வர்ணத்தில் குறிப்பிடுகின்றது. இதிலிருந்து மூவகைப் பண்புகளும் தெளிவாகின்றது. இதையே – ‘துர்க்காஸப்தசதீ’ முதல்கதை – நடுக்கதை – உயர்கதை என்று பிரித்துக் காட்டுகிறது இவர்களது வரலாற்றை.
இவளே கௌரீ தேகத்திலிருந்து தோன்றிய மஹாஸரஸ்வதி ஆவாள் என்று வைக்ருதிக ரஹஸ்யம் கூறும். எனவே மஹாசக்தியின் குணங்களைப் பார்க்கின்றபோது பெயர் – வடிவமாற்றம் தென்படுகிறது. எதற்காக இவை இங்கு கூறப்பட்டது என்றால், இத்தகைய ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மூலம் தோன்றிய இத்தகைய தெய்வீக சக்திகளின் ஐக்ய பரிணாமமாகத் தோன்றுகிறாள் இந்தப் பராசக்தி சண்டிகா தேவி.
Reviews
There are no reviews yet.