TEEN AGE KEVIKAL NIBUNARKALIN BATHILKAL
ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்கமுடியாத பதிவுகளைக் கொண்ட பருவம் பதின் பருவம். இந்தப் பருவம்தான் இளைஞர்களின் பாதையை நிர்ணயம் செய்கிறது. வாலிப உலகம், பருவ விளையாட்டு, இளமைக் குறும்பு… இப்படி இளைஞர்களின் செயல் விளைவுகளுக்கு பல்வேறு உற்சாகப் பெயர்கள். வாழ்க்கையின் தரத்தை உயர்த்திக்கொள்வதற்கான தனி மனிதத் தேடல்களானாலும் சரி… உடலுக்கும் மனசுக்கும் களிப்பைத் தருகிற பொழுதுபோக்கானாலும் சரி… புதிது புதிதாகத் தேடுகிற துறுதுறுப்பு உடையவர்கள் இளைஞர்கள்தான். ஆணும் பெண்ணும் கலந்த அந்த இளைஞர் சக்திதான் எதிர்கால ஆரோக்கியமான உலகத்தை வடிவமைக்கும் இளமைப் பிரதிநிதிகள்! அந்த இளமைப் பிரதிநிதிகளின் உலகத்தில் எதுவெல்லாம் ரசிக்கப்படுகிறது, எதுவெல்லாம் வரவேற்கப்படுகிறது, இன்னும் என்னவெல்லாம் தேவைப்படுகிறது… என அனுபவம் வாய்ந்த பல துறைகளைச் சார்ந்த நிபுணர்களும் அறிஞர்களும் ஆய்வு நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். நவ நாகரிக உலகின் கால மாறுபாடுகளால், இளைஞர்கள் புதியபுதிய பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என ஆய்வு முடிவுகளையும் பட்டியல் போடுகிறார்கள். ‘ஐ&பாட்’டை காதில் மாட்டிக்கொண்டு இன்றைய இளைஞனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கவும் தெரியும்… உலகப் பொருளாதாரம் பற்றி புத்தகத்தைப் படிக்காமலே அக்குவேறு ஆணிவேறாக அலசியெடுக்கவும் தெரியும். இருந்தாலும், சட்டம், மருத்துவம், ஆண்&பெண் உறவு, மனநலம் சார்ந்த பிரச்னைகளில் என்ன முடிவெடுப்பது..? அதை எப்படி செயல்படுத்துவது..? போன்ற விவரங்களை பெரும்பாலான இளைஞர்கள் அறியாமல்தான் இருக்கிறார்கள். பருவப் பயணத்தில், ஊற்றெடுக்கிற இளமைப் பரவசத்தில் பல சந்தேகங்களும் கேள்விகளும் அணிவகுத்து வரும். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மிகுந்த அக்கறையோடு இந்த நூலில் பதில் தந்திருக்கிறார்கள். அந்த ஆலோசனைகள், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக செப்பனிட்டுக்கொள்ளவும், அறிவு சார்ந்த விசயங்களை மேன்மேலும் மெருகேற்றிக் கொள்ளவும் சிறந்த வழிகாட்டியாக அமையும். சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கவும் இதோ, இங்கே தொடங்குகிறது இளைஞர்களுக்கான புதிய சகாப்தம்!
Reviews
There are no reviews yet.