THALITH MAKKAL MEEDHANA VANMURAI PRAND LANE IDHAZH VELYITA SEIDHI KATURAIGAL -(1995-2004)
திரு.விஸ்வநாதன் அவர்களின் கட்டுரைகள் சாதி சமூகத்தின் செயல்பாட்டையும் குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கையையும் நம்முன்னே படம்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தை ரத்தமும் சதையுமாக நம்முன் இது வைக்கிறது. இளம் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூலாக இது உள்ளது.தலித் மக்களுக்கான கொள்கை உருவாக்கத்தில் ஆதார ஆவணமாக சமூகத்திற்கு இது பயன்படும். இன்னமும் நம் மக்களின் மனதில் நீடிக்கிற பாராமை,அணுகாமை,தீண்டாமை,சாதிய பாகுபாடுகள், சாதி,வர்ண உணர்வுகளை கடக்காமல் இந்திய சமூகத்தால் சனநாயகத்தைநோக்கி செல்ல முடியாது.அதை அனுபவிக்கவும் முடியாது.அத்தகைய பாதையில் சென்றால்தான் இந்திய சமூகம் ஒன்றுபட்டதாக நீடிக்க முடியும்.இத்தகைய சமூகத்தில் வாழும் ஒரு இளைஞருக்கு சனநாயகத்தை அறிமுகப்படுத்துவதாக இந்த கட்டுரைகள் அமையும்.
Reviews
There are no reviews yet.