தமிழர் வரலாறு
ஞாலம் என்பது மக்கள் வாழும் உலகமாகிய இம்மாநிலம், ‘பூமி’ என்னும் வடசொல்லை வேண்டாது வழங்கியதனால், ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றுப் போயிற்று. தென் சொல்லெனினும் தமிழ்ச் சொல் லெனினும் ஒக்கும்.
ஞாலநிலப்பாகம் இன்றுள்ள வாறு ஐந்து கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொன்று தொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்ட வனம் (Gondwana), அங்காரம் (Angarh), (பாலதிக்கம் Baltica), அமசோனியம் (Amazonia) என்ற நாற்பெரு ) நிலங்களாகவும் ஒரு சில தீவுகளாகவும் பகுந்திருந்தது. காண்டவனம் ஆப்பிரிக்காவையும் கடகத் திருப்பத்திற்குத் (Tropic of Cancer) தெற்கிலுள்ள இந்தியாவையும் ஆத்திரேலி யாவையும், அங்காரம் ஆசியாவின் வடகீழ்ப் பெரும் பகுதியையும், பாலதிக்கம் வட அமெரிக்காவின் வடகீழ் பகுதியையும் கிரீன்லாந்து என்னும் பைந்தீவையும் ஐரோப்பாவின் தென் பகுதியையும், அம்சோனியம் தென்னமெரிக்காவையும், தம்முட் கொண்டிருந்தன. அரபிக்கடலும் வங்காளக்குடாக் கடலும் அன்றில்லை. இந்துமாவாரியின் பெரும்பகுதியும் அத்திலாந்திக்க மாவாரியின் வடபகுதியும் நிலமாயிருந்தன. நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதிமா வாரியொடு சேர்ந்திருந்தது. அதனால், பனிமலைத் தொடர் (இமயம்) அன்று கடலுள் மூழ்கியிருந்தது.’
Reviews
There are no reviews yet.