1 review for தீராக்காதலி
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹230.00.₹220.00Current price is: ₹220.00.
தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
#தீராக்காதலி
சாரு நிவேதிதா
கொஞ்சம் விரைவாக வாசிக்கலாமே என்று சாருவின் புத்தகத்தினை எடுத்தேன். ஏனென்றால் சாருவின் எழுத்துநடை மிக வேகமானது. எடுத்த பின்புதான் இது நாடக நடிகர்களை பற்றிய கட்டுரை தொகுப்பு என்பதே தெரியும்.
1.தியாகராஜ பாகவதர்
மன்மத லீலையை வென்றோர் உண்டோ என்ற பாடல் ஒன்றே போதும். இத்தலைமுறை வரை MKT யை நினைவில் வைத்திருக்க. ஆனால் அத்திரைப்படம் மட்டுமல்ல பாகவதரின் அடையாளம். நாடக மேடைகளில் அவருக்காக கூடிய கூட்டங்கள் அத்தனையும் அவரது பொன்மேனி & காந்தக்குரலுக்கானது. அவர் நடத்த படங்களில் குறைந்தது 40 பாடல்கள் இருக்குமென்றால் பாருங்கள். அத்தனை படங்களும் ஹிட். அவரது ஆரம்ப காலத்திலிருந்து வாழ்க்கை இறுதி வரை இக்கட்டுரை சொல்லி செல்கிறது.
100 வருடங்களுக்கு முன்பே லட்சங்களில் சம்பாதித்து, சூப்பர் ஸ்டாராக வாழ்ந்த மனிதர் செய்யாத கொலைக்கு சிறைக்கு சென்று கடைசியாய் கண்பார்வையற்று கோயிலில் ஆண்டியாய் அமர்ந்திருந்த கோலம் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. வாழ்க்கைதான் எத்தனை நிலையாமையானது.
2. பி.யு.சின்னப்பா
பாகவதர் பாடல் & வசீகரம் என்றால் சின்னப்பா நடிப்பும் ஆக்சனும். நாடக காலங்களில் தொடங்கி திரைப்படம் வரை அவரது டெடிகேசன் லெவல் வேறு உச்சத்தில் இருந்திருக்கிறது.
படங்களெல்லாம் பயங்கரமான ஹிட். ஏகப்பட்ட வருமானம். ஆனால் பாகவதர் போல இல்லாமல் ஒழுங்காக சேர்த்து வைத்திருக்கிறார். இவரது சொத்து மதிப்புகள் அதிகமாவதை பார்த்து விட்டு புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் இனி இவருக்கு யாரும் வீடு, நிலம் விற்க கூடாது என்ற அளவிற்கு வளர்ச்சி.
ஆனால் உச்சத்தில் இருக்கையிலேயே மரணம். அப்போது அவர் மகன் ராஜபகதூருக்கு 6 வயது. இந்த ராஜபகதூர் யார் என்றால் கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் தலையில் கரகம் கீழே விழாமல் ஒரு சிலம்பாட்ட சண்டை போடுவாரே? அதில் வரும் மீசைக்காரர். எப்பேர்பட்ட சூப்பர் ஸ்டார் செல்வந்தரின் மகன் ஹீரோவாய் அறிமுகமாகி வெற்றி பெற இயலாமல் சின்ன சின்ன வேசங்களில் முகத்தை காட்டி சென்றிருக்கிறார்.
3. கிட்டப்பா
உண்மையில் எனக்கு இப்படி ஒருவர் இருந்தார் என்பதே தெரியாது. இந்நூலை படிக்கும் போதுதான் 16 வயதினிலே படத்தில் வரும் பாடல் மூளைக்குள் ஓடிக் கொண்டே இருந்த்து.
“கிட்டப்பாவின் பாடலை கேட்டேன், சின்னப்பாவை நேரில் பார்த்தேன்”
இந்த கட்டுரை பார்க்கும் போதுதான் இதன் அர்த்தம் புரிந்தது. ஏனென்றால் கிட்டப்பாவை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தனது 28 வது வயதிலேயே 1933ல் இறந்து விட்டார். ஆனால் அவரது பாடல்கள் தமிழகம் மட்டுமல்ல, இலங்கை, பர்மா, சிங்கப்பூர் வரை பிரபலம். கிட்டப்பாவின் பாடல்களை கேளாமல் யாருமேயிருக்க வாய்ப்பில்லை.
இன்னொன்று பிரபல ஔவையார் நடிகை கே.பி.சுந்தராம்பாளின் கணவர் இவர்தான்.
இவரை பற்றி இந்த புத்தகத்தில் எண்ணற்ற தகவல்கள் உள்ளன. சாரு ரொம்பவே மெனக்கெட்டுருக்கிறார்.
அதிலும் குறிப்பாக சுந்தராம்பாளுக்கும் இவருக்குமான கடித போக்குவரத்துகளை கூட அப்படியே தந்துள்ளார். அக்கால காதல் கணவன் மனைவி இடையிலான ஊடல் சண்டை அனைத்தும் அதில் தெரிகிறது.
ஏகப்பட்ட பாடல் குறிப்புகள். எனக்கு சங்கீத ஞானம் சுத்தமாக இல்லாததால் பிடிபடவில்லை. அதில் ஆர்வம் இருப்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
4. தீராக்காதலி – சுந்தராம்பாள்.
தன்னுடன் நடித்த ஏற்கனவே திருமணமான கிட்டப்பாவை காதலித்து சாதிமறுப்பு திருமணமுடித்து வெறும் 3 வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து, அதன்பின் முழுக்க அவரின் சந்தேகத்திற்கு ஆளாகி தனது 25 வயதிலேயே விதவையான சுந்தராம்பாள் 49 வருடம் அதே கோலத்திலேயே இருந்தார். அதற்கு காரணம் பெண்ணடிமைத்தனம் அல்ல. கிட்டப்பாவின் மீதான காதல். இருவரிடையே எப்படி அறிமுகம், எந்த புள்ளியில் காதல், திருமண வாழ்வு என அனைத்தையும் விவரிக்கிறார். இதுவரை ஔவையராக மட்டுமே என் கண்களுக்கு தெரிந்த சுந்தாராம்பாளின் இளமை பருவம், காதல் வாழ்வினை யோசிக்கையில் சாரு சொல்வது போல் தீராக்காதலி என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
5. எதிர்குரல் எம்.ஆர்.ராதா
நாடக மேடைகளில் பாடல் இல்லாமலும் நடிக்க முடியும் என வீம்புக்கு பாடாமல் நடித்த நடிகர். எம்.ஆர்.ராதா பற்றி அனைவருக்கும் தெரியும். அவருக்கு தெரியாத சில தகவல்களை இப்புத்தகம் சொல்கிறது.
6. எம்.ஜி.ராமச்சந்திரன்
நாடக மேடையில் இருந்து சினிமாவை கட்டியாண்டதோடு நாட்டையும் ஆண்ட மனிதர். அவரக பற்றி பல தகவல்களை இப்புத்தகத்தில்தான் தெரிந்த்து.
ஜானிகியம்மாள் ஏற்கனவே மணமாகி கணவனுடன் வாழ்ந்து வந்து பின்னர் எம்ஜியாருக்காக விவாகரத்து பெற்று திருமணம் செய்து கொண்டதெல்லாம் இதில்தான் படித்து தெரிந்து கொண்டேன்.
அதே போல் இவரது ஆட்சியை பற்றி கூறுகையில் நல்ல துக்ளக் ஆட்சி என்கிறார். அது மிகவும் பொருந்தும்.
மொத்தத்தில் 100 வருட முந்தைய நாடக-சினிமா ஆளுமைகளை பற்றி அறிந்து கொள்ள இப்புத்தகம் பெரிதும் உதவும்.
எனக்கு முக்கியமாக வாழ்வின் நிலையாமையை உணர்த்தியது.