2 reviews for தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும்
Add a review
You must be logged in to post a review.
₹110.00
தில்லையின் சிறப்பு
தில்லை என்றழைக்கப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயில் சைவ சமயத்தினரின் மிக முக்கியமான கோயிலாகும். திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடப்பெற்ற சிறப்பு மிக்க இடம் இந்த நடராசர் கோயில். சேக்கிழாரின் பெரிய புராணம் பாடப்பெற்ற திருத்தலமும் இதுவே.
சிதம்பரச் சிக்கல்
தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சிவபுராணங்களை தில்லை நடராஜர் கோயிலின் சிற்றம்பல மேடையில் பாடப்போன மூத்த சிவனடியார் ஆறுமுகசாமி தீட்சிதர்களால் தடுக்கப்பட்டார். அவரைப் பாடவிடாமல் சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையை தீட்சிதர்கள் பெற்றார்கள். அறநிலையத் துறை ஆணையர் சிவனடியார் பாடுவதற்கான ஆணையை வழங்க, உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று மீண்டும் தடை உத்தரவு பெறுகிறார்கள் தீட்சிதர்கள்.
மேடையின் பின்னணி
சிற்றம்பல மேடையில் தமிழில் பாட விடாமல் தடுத்து நிற்கும் செயல்களுக்கான பின்னணியில் உள்ள அரசியல் சக்திகள், வெள்ளைக்காரர்கள் காலத்தில் வந்த தீர்ப்பு,1951-ம் ஆண்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.மோகன், ஆர்.பானுமதி தந்த தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என மொத்தத்தையும் ஆவணமாகத் தொகுத்துத் தந்திருக்கிறது இந்நூல்.
வழக்கும் எழுத்தும்
நூலாசிரியர் சிகரம் ச.செந்தில்நாதன் வழக்கறிஞராக மட்டுமல்ல, எழுத்தாளராகவும் இருப்பதனால், ‘தில்லைக்கோயில் போராட்டத்தைத் தொடரவும், வெல்லவும் இன்னும் வாய்ப்பிருக்கிறது’ எனும் நம்பிக்கையோடு இந்நூலை முடித்துள்ளார்.
– மு.முருகேஷ்
நன்றி – தமிழ் இந்து
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
தில்லைக் கோயிலும்
தீர்ப்புகளும்
சிகரம். ச.செந்தில்நாதன்
சந்தியா பதிப்பகம்.
சிதம்பரம் நடராஜர் கோயில் சைவசமயத்தினருக்கு மிக முக்கியமானதாகும்.
சைவ சமயத்தின்
நான்கு சமயக்குறவர்களாலும் பாடப்பெற்ற கோயிலாகும்.
தில்லையில் நந்தன் நந்தனாராக கொடுத்த விலையென்ன கொஞ்சமா!
நந்தன் முதல்
ஆறுமுக நாவலர் வரை தீட்சிதர்களின் வர்ணாசிரம கொடுமை பற்றி விளக்குகிறது
இந்த நூல்
தில்லையில் நடராஜர் கோயில் எழுந்த வரலாறு,
கோவிந்தராஜப் பெருமாளை
கடலில் வீசியதையும், பின்னர்
மறு புணரமைப்பு செய்ததையும்,
சிதம்பரம் “திருச்சிற்றம்பலம்”
ஆன கதையும்,
சிவனுக்கும் காளிக்கும் நடந்த நடனப்போட்டியில்
சிவன் இடதுகாலை தூக்கி சூழ்ச்சியால் காளிதேவியை
வென்று “ஆனந்ததாண்டவம்”
ஆடிய கதையையும்
மிக தெளிவாக நூலாசிரியர் அறியத் தருகிறார்!!
ஆதிக்க சாதிகள் தங்களது
கோர முகத்தை காட்டும் வரலாறாகவே
நந்தன் கதை
அறியப்ப்படுகிறது,
நந்தனின் வாழ்க்கையில் சைவசமயத்தின்
பெருமையைவிட
சாதிக் கொடுமையின் சிறுமையை
அதிகம் பேசுகிறது
சிதம்பரம் நடராஜர் கோயில்!
இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்
வாசகர் வட்டம் மதுரை மாவட்டம்
02.04.2020.
ART Nagarajan –
தில்லைக் கோயிலும்
தீர்ப்புகளும்
சிகரம். ச.செந்தில்நாதன்
சந்தியா பதிப்பகம்.
சிதம்பரம் நடராஜர் கோயில் சைவசமயத்தினருக்கு மிக முக்கியமானதாகும்.
சைவ சமயத்தின்
நான்கு சமயக்குறவர்களாலும் பாடப்பெற்ற கோயிலாகும்.
தில்லையில் நந்தன் நந்தனாராக கொடுத்த விலையென்ன கொஞ்சமா!
நந்தன் முதல்
ஆறுமுக நாவலர் வரை தீட்சிதர்களின் வர்ணாசிரம கொடுமை பற்றி விளக்குகிறது
இந்த நூல்
தில்லையில் நடராஜர் கோயில் எழுந்த வரலாறு,
கோவிந்தராஜப் பெருமாளை
கடலில் வீசியதையும், பின்னர்
மறு புணரமைப்பு செய்ததையும்,
சிதம்பரம் “திருச்சிற்றம்பலம்”
ஆன கதையும்,
சிவனுக்கும் காளிக்கும் நடந்த நடனப்போட்டியில்
சிவன் இடதுகாலை தூக்கி சூழ்ச்சியால் காளிதேவியை
வென்று “ஆனந்ததாண்டவம்”
ஆடிய கதையையும்
மிக தெளிவாக நூலாசிரியர் அறியத் தருகிறார்!!
ஆதிக்க சாதிகள் தங்களது
கோர முகத்தை காட்டும் வரலாறாகவே
நந்தன் கதை
அறியப்ப்படுகிறது,
நந்தனின் வாழ்க்கையில் சைவசமயத்தின்
பெருமையைவிட
சாதிக் கொடுமையின் சிறுமையை
அதிகம் பேசுகிறது
சிதம்பரம் நடராஜர் கோயில்!
இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்
வாசகர் வட்டம் மதுரை மாவட்டம்
02.04.2020.