திணிக்கப்பட்டதா திராவிடம்?

Publisher:
Author:

120.00

Out of stock

இது, எனதுப் பத்தாவதுப் படைப்பு என்பதில் மகிழ்ச்சி!

இதுவரை, வரலாறுப், பண்பாட்டுத் தளங்களில் பயணித்துக் கொண்டிருந்த நான், முதன் முறையாக அரசியல் தளத்தில் இறங்கியிருக்கிறேன்! 

“திராவிடம்”
கடந்த ஒன்னரை நூற்றாண்டுகளாகத் தமிழகத்தைக் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு விசயம்.

இதுபற்றி கடந்த அரை நூற்றாண்டுகளில் ஏராளமான ஆய்வுகள், வெளியீடுகள் வந்துள்ளன. விவாதங்களும் நடந்துகொண்டு இருக்கின்றன.

அந்த வரிசையில் இணைந்திருக்கிறது, “திணிக்கப்பட்டதா திராவிடம்?”

“திராவிடம்” எனும் சொல் தமிழக அரசியல் தளத்தில் ஏற்படுத்தியுள்ளத் தாக்கத்தை வரலாற்று ரீதியில் அணுக இந்நூலில் முயற்சி செய்திருக்கிறேன்.

குறிப்பாக, “திராவிட நாடு திராவிடருக்கே” முழக்கம் குறித்தும்…

11.09.1938 – சென்னை கடற்கரைக் கூட்டத்தில், “தமிழ்நாடு தமிழருக்கே” என பெரியார் முழக்கமிடுகிறார்.

23.10.1938 – குடி அரசு இதழில், “உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சைக் குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடுகளில் தமிழ்நாடு தமிழருக்கே எனும் வாசகத்தை எழுதிப் பதியுங்கள்!” என தலையங்கம் தீட்டப்படுகிறது.

17.12.1939 – குடி அரசு இதழில், “திராவிடநாடு திராவிடருக்கே” என முதன் முறையாகத் தலையங்கம் தீட்டுகிறார் பெரியார்.

ஏறக்குறைய ஓராண்டு இடைவெளியில், பெரியாரின் முழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. எதனால்?

இதற்கு இதுவரை பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டு விட்டன.

ஆனாலும், பெரியாரின் பார்வையில், முழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கானக் காரணத்தை இந்நூல் ஆய்வு செய்கிறது.

இதுபற்றிய விமரிசனங்கள் வரலாம். வரும். விவாதிப்போம் நண்பர்களே..!

– கோ. செங்குட்டுவன்

Delivery: Items will be delivered within 2-7 days