நடுகல்
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ் Author: தீபச்செல்வன்Original price was: ₹220.00.₹210.00Current price is: ₹210.00.
விடுதலைப் புலிகள் பற்றிய ஈழம் ஏற்ற தமிழர்களின் வரலாற்று நினைவும், வரலாற்று உளவியலும் பற்றியதாக நடுகல் தன்னை விவரித்துச் செல்கிறது. இயக்கம், போராளிகள் எனத் தனியாக யாரும் இன்றி ஒவ்வொரு இல்லமும் மாவீரர் துயிலும் இல்லமாகவும், ஒவ்வொரு தாயும் மாவீரர்களைப் பெற்றுத் தந்த தாயாகவும், ஒவ்வொரு குழந்தையும் வீரச்சாவில் மீந்த குழந்தையாகவும் உள்ள ஒரு மண்ணில் இனியான வரலாறும் குற்ற உணர்வின் வரலாறாக மீறும் எனில் அது காலம் காலமான இனத்துயரமாகவே பெருகிச் செல்லும். அந்தத் துயரத்திற்கு எதிரான ஒரு நினைவுருவாக்கமாக நடுகல் இருக்கிறது. ஆயுதங்கள் அற்ற, போர்கள் அற்ற மாற்றுப் போராட்டம் பற்றிய தேடல்தான் நடுகல்.
Delivery: Items will be delivered within 2-7 days
வினோத் –
ஈழத்தில் போர் இன்னும் ஓயவில்லை, போராட்ட வடிவமே மாறியுள்ளது. நெடுந்துயர் நிறைந்த அந்த மண்ணின் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளின் மூலம் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பைப்பற்றியும், நில அபகரிப்பை பற்றியும், அடையாள அழிப்பை பற்றியும் தங்கள் எழுத்துக்கள் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
தீபச்செல்வனின் இந்த நடுகல் நாவல் போரினால் அல்லல்படும் ஒரு சிறுவனின் பார்வையில் அமைந்துள்ளது.
இயக்கம் ,விடுதலை ,உரிமை என்று எதைப்பற்றியும் அந்தச் சிறுவனுக்கு தெரியாது. அவனது ஏக்கமெல்லாம் தனது அண்ணன் தன்னோடு இருக்க வேண்டும். ஆனால் அவன் அண்ணனோ என் தங்கை என் தம்பி என் அன்னை இந்த நிலத்தில் மகிழ்வோடு வாழ வேண்டும் என்றால் நான் போராடித்தான் ஆகவேண்டும் என்று சென்று வீரச்சாவு அடைகிறான்.
யுத்தகால இடப்பெயர்வுகளில் தனது அண்ணனின் உருவ படத்தை இழந்துவிடுகிறான். தன் அண்ணனின் அடையாளமாய் ஒரு உருவப்படம் கூட இல்லாததை எண்ணி அதை தேடி அழைகிறான்.
போர் முடிந்தும் மக்கள் அந்த நிலத்தில் ஒரு அடிமையைப் போல தான் நடத்தப்படுகிறார்கள். “நிமிர்வோடும் பெருமிதத்தோடும் வாழ்ந்த இடத்தில், அடிமையைப்போல வாய்மூடி மௌனமாக நிற்க, மனம் குமுறியது. தேகம் எரிந்தது.”
தீபச்செல்வனின் இந்த நாவல் பல எதிர்பிம்ப அரசியலை, போலிகளை அடையாளங் கான உதவுகிறது.
“எங்களுக்கு எதிராய் என்ன நடக்குதோ.. அதை.. எங்களிட்டை இப்ப என்ன ஆயுதம் இருக்குதோ அதை வச்சு எதிர்ப்பம்…. நாங்கள் நாங்களாய் இருப்பம்”