துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

Publisher:
Author:

180.00

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

180.00

Thuravaadaikkul Maraindha Kadhal Manam

Prabanchan

தமிழ் இலக்கிய ஆய்வுகள், பரவச மொழிதலாகவும் உயர்வு நவிற்சியாகவுமே பல காலம் இருந்து வந்துள்ளன. கடந்த அரை நூற்றாண்டாக ஆய்வுகள் புதிய திசையில் நடைபெறத் தொடங்கியுள்ளன. புனைவாகிய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஆய்வுகள் மற்றொரு புனைவாகவே இருந்த நிலைமாறி, கல்வெட்டுகள், செப்பேடுகள் துணைகொண்டும் மானுட இயல் முதலான பல புதிய துறை அறிவு கொண்டும் புதிய சொல்லாடலைக் கட்டமைத்துள்ளன. தமிழ் ஆய்வைப் புதிய தடத்தில் செலுத்திய முன்னோடிகளைப் பின்பற்றி, பிரபஞ்சன் ஆதித் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்துகளை முன்வைக்கும் கட்டுரைத் தொகுப்பு இது.

பரத்தையர் என்று பெண்களில் ஒரு சாராரைப் பிரித்து வைத்துக் குற்றவுணர்வே அற்று வாழ்ந்த ஒரு சமூகத்தில் பரத்தையர் உருவாகி வாழ்ந்த விதம் பற்றி, அவர்களைச் சமூகம் எவ்விதம் பார்த்திருக்கிறது என்பது பற்றிய ஆய்வின் ஒரு பகுதி இது.

சங்க இலக்கியம், தொல்காப்பியம் தொடங்கி, தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலம் வரையிலான இந்த ஆய்வில், மணிமேகலை காலம் வரையிலான ஒரு முக்கிய பகுதிகளைப் பிரபஞ்சனின் இக்கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன.

Delivery: Items will be delivered within 2-7 days