வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் ‘சங்க இலக்கியம்’)

Publisher:
Author:

Original price was: ₹250.00.Current price is: ₹235.00.

வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் ‘சங்க இலக்கியம்’)

Original price was: ₹250.00.Current price is: ₹235.00.

Kavitokai: Varich Chootinum Parpavarillai 
Payani

 

 

கவித்தொகையின் பாடல்களைப் படிக்காமல் இருத்தல் என்பது, எதையும் பார்க்காமல், சுவரின் பக்கம் திரும்பி நின்றுகொண்டிருப்பதைப் போன்றதல்லவா? _கன்ஃபூஷியஸ் கவித்தொகை சீன இலக்கிய வரலாற்றின் முதல் நூல். சீனாவின் அரசியல், கலை மற்றும் சமூக வாழ்வை நிர்ணயித்த நூல். நாட்டுப் பாடல்கள், விழாப் பாடல்கள், வேண்டுதல் பாடல்களின் தொகுப்பு. மிக நெடியதும் வளமானதுமான சீன மரபு இலக்கியக் கருவூலத்திலிருந்து எந்த நூலும் தமிழில் இதுவரை நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதில்லை என்ற வசை இன்று பயணியால் கழிந்தது. கவித்தொகை பற்றிப் பயணி வழங்கியுள்ள அறிமுகக் கட்டுரைகளின் வலு, கவிதைகள் பரிமளிப்பதற்கு இன்றியமையாததாக இருக்கிறது. சீன இலக்கியப் பெரும்பரப்புக்குக் கைகாட்டி மரமாக இவை உள்ளன. _ஆ.இரா. வேங்கடாசலபதி மூவாயிரமாண்டுப் பழைமையையும் முற்றிலும் வேறுபட்ட மொழியமைப்பையும் கடந்து சீனச் சாயல் சிதையாமல் தமிழாகியிருக்கும் ‘கவித்தொகை’யைத் தாம் கலந்து பயிலும் எவரும் அது காட்டும் வாழ்வின் துடிப்பையும் கவித்துவத்தையும் உணர முடியும்; தமிழ்ச் செவ்வியல் இலக்கியத் தொடர்புடையோரெனில், மேலும் ஆழ்ந்து நினைக்க முடியும்; பழந்தமிழ்ப் பனுவல்களைச் சீனச் செவ்வியல் ஒளியில் துலக்கிக் காட்ட முடியும்.

பா. மதிவாணன்

Delivery: Items will be delivered within 2-7 days