KAASI YATHIRAI
இன்றைய நவீன இந்தியாவை வேதம் பரதக்கண்டம் என்றே அழைக்கிறது. சுதந்திரத்துக்கு முன்பு இந்நாடு பல சமஸ்தானங்களாக விரவிக் கிடந்தன. ஆனால் இந்த புண்ணிய தேசத்தின் அத்தனை பிரதேசங்களையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு இழை இணைத்தது; அது ஆன்மிகம். அதற்கு சாட்சிதான் காசி- ராமேஸ்வரம் புனித யாத்திரை.
காசி விஸ்வநாதரை தரிசிக்க விரும்பும் ஒரு தென்னிந்தியர், ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு காசியை அடைந்து விஸ்வ நாதரை தரிசித்து கங்கையில் நீராடி மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாதரை தரிசித்து யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
வட இந்தியரோ, காசியில் விஸ்வநாதர் தரிசனத்தோடு தொடங்கி, ராமேஸ்வரம் வந்து இங்கு கடலாடி… ராமநாதரை தரிசித்துவிட்டு மீண்டும் காசி விஸ்வநாதர் தரிசனத்தோடு யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும் என்பது ஆன்மிக ஒழுங்கு. இப்படி இந்தப் புனித யாத்திரையால், வடக்கும் தெற்கும் அறிவிக்கப்படாத பந்தத்தோடு நீடிப்பதில் இருக்கும் தேச-ஆன்மிக ஒருமைப்பாடுதான் இந்நாட்டின் பலம். மேலும் இந்த ஆன்மிக யாத்திரையின் நோக்கமே நம் முன்னோர்களுக்கு சிரார்த்தம் முதலான சடங்குகளின் மூலமாக நன்றி சொல்வதும், புண்ணியம் தேடுவதும்தான். நம் வேர்களுக்கு நன்றி சொல்லும் முயற்சி ஆன்மிகத்தின் மூலம் நமக்குள் உணர்த்தப்படும் அழகிய பயணம் இது. இந்த அற்புதமான பயணத்திற்கு மிக நுட்பமாக வழிகாட்டுகிறது.
இந்நூல் ஒவ்வொரு இடத்திலும் இந்த நூலின் வழிகாட்டுதலைக் கொண்டு நம் பயணத்தை இனிமையாக்கிக்கொள்ள முடியும் என்பது உண்மை!
Reviews
There are no reviews yet.