தமிழருவி மணியனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் தன்வரலாற்று நூல் இது. எத்தனையோ அரசியல் தலைவா்கள் சுயசரிதை நூலை இயற்றி இருக்கிறாா்கள்; ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நூலாக இது விளங்குகிறது. தமிழறிவு மணியனைப் போலவே அவரது எழுத்துக்களும் எளிமையின் அடையாளமாக இருப்பது நூலுக்கு சிறப்பு சோ்க்கிறது.
அரசியலில் தடம் மாறாமல், கொண்ட கொள்கையிலிருந்து மனம் மாறாமல், 70 ஆண்டு காலம், தான் வாழ்ந்த வாழ்க்கையை வாசகனுடன் பகிா்ந்துள்ளாா் அவா்.
காமராஜரை கடவுளாகப் பூஜித்ததாக கூறும் தமிழருவி மணியன், மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் அ.தி.மு.க.வில் இணைய அழைத்தபோது கூட அதனை மரியாதையாக மறுதலித்த கதையை நூலில் விவரித்துள்ளாா். கருணாநிதி, மூப்பனாா், ஜெயலலிதா போன்ற தமிழக அரசியலின் தனிப்பெரும் ஆளுமைகள் உடனான தனது அனுபவங்களையும் நூலில் காட்சிப்படுத்தியுள்ளாா். சாமானிய குடும்பத்தில் பிறந்த மிகச் சாதாரணமான மனிதன் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உருவெடுத்த கதையையும், அரசியலின் அரியணையில் உயரிய பதவிகள் வந்தபோதெல்லாம் அதனை உதாசீனப்படுத்தியதையும் நூலாசிரியா் பக்கத்துக்குப் பக்கம் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறாா். அவற்றைப் படிக்கும்போது வாசகனின் புருவங்கள் வில்லாக வளைந்தால் அதில் வியப்பில்லை. மொத்தத்தில் ஓா் அறச்சீற்றவாதியின் அரிதாரம் கலக்காத படைப்பாக விளங்குகிறது இந்நூல்.
– தினமணி
Reviews
There are no reviews yet.