october russia puratchiyin kathai
“ரஷ்யப் புரட்சி குறித்து ஏற்கெனவே ஏராளமான படைப்புகள் வெளி வந்துள்ளன. அவற்றில் பல மிகவும் மெச்சத் தக்கவை. கவனமான ஆய்வின் விளைவுதான் (எனது) இந் நூல் எனினும், இதில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளோ அல்லது விவரிக்கப்பட்டுள்ள பேச்சுகளோ வரலாற்று நூல்களில் ஏற்கெனவே இடம்பெறாதவையல்ல. இந் நூல் எல்லாவற்றையும் உள்ளடக்கியதோ அல்லது அதன் கருப்பொருள் பற்றிய அனைத்தையும் அறிந்த துறை வல்லுநரால் எழுதப்பட்டதோ அன்று. மாறாக, மாநிலத்தோர் அனைவரிடமும் மலைப்பையும், திகைப்பையும் ஒருசேர ஏற்படுத்திய புரட்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், அது கிளப்பிய பேரொலியின் தாளச் சந்தத்தில் தாமும் கலந்து கரைந்து போகவும் ஆர்வத்துடன் காத்துக் கிடப்போருக்கு சுருக்கமானதோர் அறிமுகவுரைதான் இது. ஏனெனில், அதை யொரு கதை வடிவில் சொல்லவே நான் இங்கே முயன்றுள்ளேன். 1917ஆம் ஆண்டென்பது ஒரு வீர காவியம்! சாகசங்கள், நம்பிக்கைகள், வஞ்சனைகள், காட்டிக் கொடுப்புகள், தற்செயலாக ஒருங்கொத்த நிகழ்வுகள், போர், சூழ்ச்சி, வீரம், கோழைத்தனம், முட்டாள்தனம், கேலிக் கூத்து, பாசாங்கு, கண்மூடித்தனமான துணிச்சல்,பேரவலம்,புத்தூழித் தொடக்கத்தின் பேராவல்கள் , மாற்றம், கண்ணைப் பறிக்கும் ஒளிவெள்ளங்கள், உருக்குப் போன்ற உறுதி, நிழல்கள், இருப்புப் பாதைகள், புகைவண்டிகள் என எண்ணிலடங்கா நிகழ்வுக் கண்ணிகளைக் கொண்ட காலச் சங்கிலி அது!
ரஷ்யாவின் ‘ரஷ்யத் தன்மை’யில் நம்மை மயக்கும் ஏதோவொன்று இருக்கிறது. திரும்பத் திரும்ப ரஷ்ய நாட்டு வரலாற்றைப்பற்றிய-குறிப்பாக ரஷ்யர் அல்லாதவர்களையும், சில சமயங்களில் ரஷ்யரையும் பற்றிய – உரையாடல்கள், வியப்பார்வத்தின் தூண்டுதலுக்கு இரையாகி “இன்றியமையாமை யியத்தையும்”, கொஞ்சமும் குறைபடாத, சொல்லில் அடங்காத, இதுவரை வெளிவராத விவரங்களைக் கொண்ட ‘கருப்புப் பெட்டி’யைத் தனது நெஞ்சக் கூண்டில் அடைத்து வைத்திருக்கிற, ‘ரஷ்ய ஆன்மா’வையும் நோக்கிப் போய் விடுகின்றன. இது எதனுடனும் இணைத்துப் பேச முடியா அவலம் மட்டுமன்று, துருவிப் பார்க்கவும் முடியாதது, விளக்கத்துக்கும் சிக்காதது : வெகுவாய்த் துவளும் ரஷ்யா, “சின்னஞ் சிறு அன்னை ரஷ்யா!”; கனவாய் விரியும் “ஆர்லாண்டோ” எனும் தனது நூலில் வர்ஜினியா உல்ப் குறிப்பிடுவதுபோல் “நெடிதாய் நீளும் அந்திப் பொழுதுகளையும், மெதுவாய் புலரும் இளங் காலை வேளைகளையும், அத்தனைச் சிறப்பாய் முடிக்க முடியுமா எனும் ஐயுறவால் பாதியிலேயே நிற்கும் சொற்றொடர்களையும் கொண்ட ரஷ்யா!”
-சைனா மீயைவில்
Reviews
There are no reviews yet.