கோசலை

Publisher:
Author:

Original price was: ₹300.00.Current price is: ₹280.00.

கோசலை

Original price was: ₹300.00.Current price is: ₹280.00.

Kosalai

 

அனைத்திலும் முழுமை பெற்ற மனிதர் எவருமில்லாத இவ்வுலகில் குறைமனிதர், நிறைமனிதர் என்ற இருமைகள் உருவாகி, வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையில் நெடுங்காலப் போர் ஒன்று நடந்துவருகிறது. இச்சமரில் முகாந்திரங்கள் ஏதுமின்றி, தன் உடற்கூறால் மட்டுமே சிக்கிக்கொள்ளும் கோசலை, புறக்கணிப்பையும், துரோகத்தையும், ஓடுக்குமுறைகளையும் தியாகத்தால் எதிர்கொண்டு எழுந்து நிற்கிறாள். நுண்மையிலிருந்து பெரும் ஆகிருதியாக விரியும் ஆலம் விதையின் பண்பைப் போன்றது கோசலையின் வாழ்வு.

தமிழ் இலக்கியப் பக்கங்களில் எவ்வளவு முயன்று தேடினாலும் கிடைக்காத புதிய வார்ப்பான கோசலையின் கதையை எழுதியிருக்கும் தமிழ்ப்பிரபா, எளிய சொல்முறையின் வழியே அதை அழுத்தமாக நிலைபெறவும் செய்கிறார். கதையில் நிகழும் கால மாற்றங்களை ஒருவித கலையமைதியுடன் வெளிப்படுத்தும் இந்நாவல், அழகு, சாதி, பொருள், தன்னிலை உள்ளிட்ட புறவிசைகளால் இயக்கப்படும் மனிதர்களின் குரூரங்களையும், அவற்றை மீறிப் பிரவாகிக்கும் அன்பையும் தவிக்கத் தவிக்கச் சொல்கிறது.

எக்காலத்திலும் நித்தியத்துவமாய் வென்று நிலைப்பது அன்பு என்பதே இப்பிரதியின் உள்ளீடு, தன்மீது வீசப்படுகின்ற வெறுப்பையெல்லாம் திரட்டி ஆற்றலாக மாற்றிவிடும் மானுட விழுமியத்தை முன்வைத்திடும் கோசலை நாவல், இருத்தலியலுக்கான அடிப்படை வினாக்களை ‘சமகாலத்தில்’ வைத்து பரிசீலனை செய்கின்ற படைப்பாகத் திரண்டு வந்திருக்கிறது.

– அழகிய பெரியவன்

Delivery: Items will be delivered within 2-7 days