திராவிடத்தால் வாழ்ந்தோம்:
திராவிடம் என்பது ஒரு தனித்த அடையாளத்திற்கான, நமது பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டு மரபின் மேன்மைகளுக்கான போராட்டத்தின் குரல். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கட்டுக்கதைகள் இடைவிடாமல் பரப்பப்படும் ஒரு காலத்தில் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய தருணம் இது. திராவிட இயக்கம் சமூக நீதிக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் ஒரு நூற்றாண்டு காலமாக ஆற்றியிருக்கும் மகத்தான பங்களிப்புகளை வரலாற்றின் வெளிச்சத்தில் நாம் அழுத்தமாகச் சொல்வது மட்டுமல்ல, திராவிடத்திற்கு எதிராகத் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பொய்களை எல்லா தளங்களிலும் உடைத்தெரிய வேண்டியிருக்கிறது. இந்த நூலின் கட்டுரைகள் திராவிட இயக்கம் பற்றி பேசுகின்றன, தலைவர் கலைஞரைப் பற்றிப் பேசுகின்றன, தளபதியைப்பற்றி பேசுகின்றன. திராவிட அரசியலின் அடிப்படையில் சமகால அரசியல் நிகழ்வுகளைப் பேசுகின்றனர்.
Reviews
There are no reviews yet.