தானாகவே மரத்திலிருந்தே பழுக்கும் பழங்களின் ருசியே அலாதியானது. அவைகளைத் ‘தன்பழம்’ என்று சொல்வார்கள். அப்பழங்கள் காடுகளில் குரங்குகளுக்கும், அணில்களுக்கும் தான் அதிகமாகக் கிடைக்கும். நமக்குக் கடைகளில் கிடைக்கும் பழங்கள் எல்லாம் ‘தள்ளிப் பழுத்தது’ (தடி கொண்டு அடித்துப் பழுக்க வைத்தது) இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் யாவும் ‘தன் பழம்’ வகையைச் சேர்ந்தது.
புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் கி.ராவின் பேரிலுள்ள அன்பினால் எழுதியவை.
கிரா என்றொரு கீதாரி
Publisher: ஜீவா படைப்பகம் Author: தொகுப்பு: கழனியூரன்Original price was: ₹160.00.₹150.00Current price is: ₹150.00.
கி.ரா என்றொரு கீதாரி (கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்):
இந்த நூலில் எழுத்தாளர்கள், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், கவிக்கோ. அப்துல் ரகுமான், ஜோ டி’குருஸ், கே. எஸ்.இராதாகிருஷ்ணன், தீப.நடராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், அரங்க. மு.முருகையன், முருகபூபதி, தேவ மைந்தன், பாவண்ணன், அர.சீனிவாசன், பிரபஞ்சமித்ரன், கி.ரா.குறிஞ்சிவேலன், இராச.திருமாவளவன், சே.திருநாவுக்கரசு, தேவி கிரிசன், ஆகாசம்பட்டு ஷேசாலம், திரைப்பட நடிகர்சிவக்குமார், திரைப்பட நடிகர்- சார்லி, தெலுங்கு எழுத்தாளர். ருத்ர துளசிதாஸ், புதுவை- இளவேனில், கார்த்திக் புகழேந்தி, மற்றும் கழனியூரன் ஆகியோர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
கழனியூரன் சொல்வது போல், இவை இந்நூலுக்காகக் கேட்டு வாங்கித் தொகுத்த கட்டுரைகள் அல்ல. அவர்களாகவே பல்வேறு காலக்கட்டங்களில் கி.ரா குறித்து எழுதின கட்டுரைகளைத் தேடிச் சேகரித்து கொண்டு வந்த தொகுப்பு. தள்ளிப் பழுத்ததைவிட தானாய் பழுக்கும் பழங்களுக்கு ருசி அதிகம் என்பார்கள். ஆகவே தன்பழமாக இந்த கிரா என்ற கீதாரி நூல் இருக்கும்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.