சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு:
“மனிதகுல வரலாறு குறித்த ஒரு சுவாரசியமான பதிவு இந்நூல். இதைப் படிக்கத் தொடங்கிவிட்டால் கீழே வைக்கவே மனம் வராது”
– பில் கேட்ஸ்
மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் தகவல்களை இந்நூல் சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுத்தளித்திருக்கிறது. எனினும் இந்த வளர்ச்சி தொடருமா? என்பது பற்றிய நூலாசிரியரின் கேள்வி சிந்திக்க வைக்கிறது.
“பொருளாதார வளர்ச்சி என்றென்றும் தொடரும் என்று முதலாளித்துவம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்துள்ள அனைத்து விஷயங்களுடனும் முரண்படுகிறது’ என்கிறார் நூலாசிரியர்.
“நம்மை நாமே கடவுளாக ஆக்கிக் கொண்ட நாம், யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத நிலையில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல் நம்முடைய சக விலங்குகளையும், நம்மைச் சூழ்ந்துள்ள சூழல்மண்டலத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சொந்த வசதியும் மகிழ்ச்சியும்தான் நமக்குப் பெரிய விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் நாம் ஒருபோதும் மனநிறைவு அடைவதில்லை… இதைவிட அதிக ஆபத்தானது வேறெதுவும் இருக்க முடியுமா?’ என்று மனிதகுல வளர்ச்சி என்று நாம் நம்பிக் கொண்டிருப்பதின் மீது எதிர்மறையான விமர்சனங்களை வைக்கிறார். நாம் வாழும் இன்றைய வாழ்க்கைமுறையைப் பற்றி சிந்திக்க வைக்கும் நூல்.
Bhojan –
புத்தகம் பற்றி
இந்த புத்தகத்தில் மொத்தம் 20 தலைப்புகளில் கட்டுரை . முதல் தலைப்பான ஹோமோ சேப்பின்ஸ் என்று நம்க்கு பேர் வர என்ன காரணம் என்பதில் இருந்து தொடங்கி படி படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று ஒரு மேம்பட்ட இனமாக வளர்ந்து நிற்கிறோம் என்ற கடைசி தலைப்பு வரை ஏகப்பட்ட செய்திகள் இதில் இருக்கின்றன இது அனைத்தும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட்ட உண்மை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மொழிகள் பற்றிய வரலாறு. விவசாயம் உருவாக காரணம் , பேரரசுகள் உருவாக்கம் ,மதங்கள் மற்றும் குடும்ப அமைப்பு அதில் பெண்களின் நிலை , முதலாளித்துவதின் பங்கு குறிப்பாக 20 மற்றும் 21 நூற்றாண்டு, அரசியல் மாற்றம் , பொதுவுடமை , அறிவியலின் வளர்ச்சி என்று சொல்லி கொன்டே போகிறது இந்த புத்தகம் அறிவியல் கட்டுரை என்பதை தாண்டியும் இந்த புத்தகம் ஒரு விவாதத்தையும் இது எழுப்புகிறது 70,000 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண குரங்கு கூட்டத்தில் இருந்த நாம் இன்று இந்த உலகில் உள்ள 90 சதவீத மிருகங்கள் உட்பட இந்த பூமி நம் கட்டு பாட்டில் வைத்து இருக்கிறோம் ஆனால் இந்த இடத்திற்கு வர நாம் செய்த கொலைகள் என்ன நம்மால் அழிக்க பட்ட சக ஹோமோ இனங்களின் எண்ணிக்கை மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை எனப்து கணக்கில் அடங்காது.ஆனால் இதை நாம் செய்யவில்லை என்றால் இன்று sapiens என்ற இனம் பூமியில் இருந்து இருக்குமா என்பது கேள்வி தான். ஆனால் இந்த கேள்விகள் புத்தகம் படித்த பிறகு எல்லோரிடமும் இந்த கேள்வி நம்மில் கண்டிப்பாக எழும். கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்