அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

காலங்களில் அது வசந்தம்
உள்மனப் புரட்சி
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
இரவல் சொர்க்கம்
அந்தரத்தில் பறக்கும் கொடி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
ஆழ்கடல் அதிசயங்கள்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
கேளடா மானிடவா
அறிவுத் தேடல்
அராஜகவாதமா? சோசலிசமா?
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
சப்தங்கள்
THE POISONED DREAM
சாலாம்புரி
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
சமஸ்கிருத ஆதிக்கம்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
கி.ராஜநாராயணன் கதைகள்
காற்றின் உள்ளொலிகள்
பொன் மகள் வந்தாள்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
சன்னத்தூறல்
உலகிற்கு சீனா ஏன் தேவை
அந்தக் காலம் மலையேறிப்போனது
தமிழ்மொழி அரசியல்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
திருவாசகம் பதிக விளக்கம்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
எரியும் பூந்தோட்டம்
குமரப்பாவிடம் கேட்போம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
அணுசக்தி அரசியல்
அந்த நேரத்து நதியில்...
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
திருக்குறள் ஆராய்ச்சி
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
வளம் தரும் விரதங்கள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
ஐந்து விளக்குகளின் கதை
'ஷ்' இன் ஒலி
காதல் 


அம்மு ராகவ் –
#அம்மா_வந்தாள்
#திஜானகிராமன்
வேதத்தை தவிர வெளியுலகம்
எதுவும் தெரியாமல் வளர்ந்துவிட்டு, அம்மா, தோழி
என்று இரு பெண்களின் மனஉணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் அப்பு….
நானாவது உன்னையே நினைச்சுட்டு சாகறேன்,
உங்கம்மா யாரையோ நினைச்சுட்டு சாகாம இருக்கா என்று கதறும்…
சிறுவயதிலிருந்தே அப்புவை நேசித்துக்கொண்டிருக்கும் கைம்பெண்ணான இந்து.
தன் மனைவியையே ஒரு முறையாவது இவளை கட்டியாள வேண்டும்னு நினைக்கிற தண்டபானி…
கணவனானாலும் சரி, சிவசுவானாலும் சரி எவனும் தன்னை ஆள முடியாது என தானே தன்னை ஆளும் பெண்ணாக, கம்பீரமாக நிற்கும் அழகான ஆளுமை அலங்காரம்…
ஒரு பெண்ணை ஆள வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவனை அப்பெண் ஆண்டுகொண்டிருக்கிறாள்…அதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் கணவனுடனான தாம்பத்தியத்தை நிறுத்திக் கொள்ள, போறும்னா போறும்தான்…என்று
60 களிலேயே தன் கணவனை பார்த்து No means No என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அலங்காரம் மட்டுமல்ல தி.ஜா வின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும்
பிரம்மிக்க வைக்கிறார்கள் என்னை…..
#அம்முராகவ்