2 reviews for அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Caste and Religion
2 × ₹120.00
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
4 × ₹370.00
Alida
2 × ₹380.00
After the floods
2 × ₹160.00
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
1 × ₹60.00
THE DRAVIDIAN MOVEMENT
3 × ₹115.00
Elementary Principles of Philosophy
1 × ₹140.00
ARTICLE 15
1 × ₹65.00
21 - ம் நூற்றாண்டில் வாஸ்து
1 × ₹220.00
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
2 × ₹100.00
English-English-TAMIL DICTIONARY
1 × ₹170.00
One Hundred Sangam - Love Poems
3 × ₹285.00
THE FINAL SOLITUDE
3 × ₹380.00
45 டிகிரி பா
1 × ₹79.00
1975
1 × ₹425.00
THE BELATED BACHELOR PARTY
4 × ₹190.00
Arya Maya (THE ARYAN ILLUSION)
2 × ₹130.00
THE TWO BUBBLES
4 × ₹330.00
The Gadfly
2 × ₹220.00
SHADOW OF THE PALM TREE
2 × ₹380.00
நளினி ஜமீலா
4 × ₹215.00
5000 GK Quiz
4 × ₹240.00
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
2 × ₹600.00
360°
2 × ₹150.00
5000 பொது அறிவு
1 × ₹140.00
1777 அறிவியல் பொது அறிவு
1 × ₹95.00
50+ இளமையோடு இருப்பது எப்படி?
1 × ₹190.00
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
5 × ₹285.00
ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு
1 × ₹110.00
16 கதையினிலே
2 × ₹95.00
Damu's Special Cookery
3 × ₹170.00
101 ஒரு நிமிடக் கதைகள்
1 × ₹315.00
108 திவ்ய தேச உலா (பாகம் - 3)
4 × ₹275.00
108 ஒரு நிமிடக் கதைகள்
2 × ₹400.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00
108 திவ்ய தேச உலா பாகம் (பாகம் – 4)
2 × ₹275.00
30 நாள் 30 ருசி
1 × ₹205.00
Moral Stories
1 × ₹75.00
English-English-Tamil-Dictionary
1 × ₹580.00
Dr. அம்பேத்கர் தன்னிகரற்ற தேசபக்தர்
1 × ₹75.00
COMPACT Dictionary [ English - English ]
1 × ₹95.00
How the steel was Tempered
3 × ₹300.00
2400 + இயற்பியல் குவிஸ்
1 × ₹85.00
Quiz on Computer & I.T.
2 × ₹80.00
அக்கிரகாரத்தில் பெரியார்
4 × ₹275.00
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
1 × ₹235.00
108 திவ்ய தேச உலா (பாகம் - 2)
1 × ₹250.00
Compact DICTIONARY Spl Edition
1 × ₹80.00
2700 + Biology Quiz
1 × ₹80.00
Red Love & A great Love
6 × ₹220.00
The Glory That Was Tamil Culture
4 × ₹280.00
A Madras Mystery
4 × ₹225.00
English-English-TAMIL DICTIONARY Low Priced
1 × ₹150.00
2800 + Physics Quiz
4 × ₹85.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
4 × ₹170.00
Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)
2 × ₹380.00
I.A.S ஆவது எப்படி?
4 × ₹120.00
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
7 × ₹200.00
India A History Through The Ages Book - 1
1 × ₹199.00
மாபெரும் தமிழ்க் கனவு
11 × ₹470.00
தாமஸ் வந்தார்
5 × ₹200.00
நான் நாகேஷ்
2 × ₹240.00
கலைஞர் எனும் கருணாநிதி
3 × ₹250.00
பிரபல கொலை வழக்குகள்
5 × ₹220.00
Mother
1 × ₹300.00
90களின் தமிழ் சினிமா
6 × ₹120.00
200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்!
2 × ₹100.00
கனம் கோர்ட்டாரே!
5 × ₹275.00
அர்த்தமற்ற இந்து மதம் (பாகம்-1 - 2)
1 × ₹335.00
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
9 × ₹125.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
3 × ₹320.00
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
2 × ₹225.00
ரம்பையும் நாச்சியாரும்
11 × ₹100.00
'நமக்கு நாமே' நாயகனின் முகநூல் முத்துக்கள்
2 × ₹90.00
100 வகை கேக்குகள் வீட்டிலேயே எளிதில் தாயரிக்கலாம்!
4 × ₹50.00
Bastion
1 × ₹650.00
"செஸ்" விளையாட கற்றுக்கொள்ளுங்கள்
2 × ₹80.00
13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
1 × ₹220.00
100 கறி வகைகள்!
2 × ₹60.00
Microsoft ACCESS - எனும் தரவு தள மேலாண்மை
1 × ₹120.00
15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி
2 × ₹100.00
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
4 × ₹460.00
சஞ்சாரம்
5 × ₹440.00
கொடூரக் கொலை வழக்குகள்
6 × ₹175.00
சோழன் ராஜா ப்ராப்தி
3 × ₹140.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
4 × ₹150.00
100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
1 × ₹1,100.00
ரோலக்ஸ் வாட்ச்
3 × ₹200.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
2 × ₹450.00
கருஞ்சூரியன்
1 × ₹80.00 Subtotal: ₹55,958.00
Caste and Religion
2 × ₹120.00
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
4 × ₹370.00
Alida
2 × ₹380.00
After the floods
2 × ₹160.00
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
1 × ₹60.00
THE DRAVIDIAN MOVEMENT
3 × ₹115.00
Elementary Principles of Philosophy
1 × ₹140.00
ARTICLE 15
1 × ₹65.00
21 - ம் நூற்றாண்டில் வாஸ்து
1 × ₹220.00
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
2 × ₹100.00
English-English-TAMIL DICTIONARY
1 × ₹170.00
One Hundred Sangam - Love Poems
3 × ₹285.00
THE FINAL SOLITUDE
3 × ₹380.00
45 டிகிரி பா
1 × ₹79.00
1975
1 × ₹425.00
THE BELATED BACHELOR PARTY
4 × ₹190.00
Arya Maya (THE ARYAN ILLUSION)
2 × ₹130.00
THE TWO BUBBLES
4 × ₹330.00
The Gadfly
2 × ₹220.00
SHADOW OF THE PALM TREE
2 × ₹380.00
நளினி ஜமீலா
4 × ₹215.00
5000 GK Quiz
4 × ₹240.00
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
2 × ₹600.00
360°
2 × ₹150.00
5000 பொது அறிவு
1 × ₹140.00
1777 அறிவியல் பொது அறிவு
1 × ₹95.00
50+ இளமையோடு இருப்பது எப்படி?
1 × ₹190.00
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
5 × ₹285.00
ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு
1 × ₹110.00
16 கதையினிலே
2 × ₹95.00
Damu's Special Cookery
3 × ₹170.00
101 ஒரு நிமிடக் கதைகள்
1 × ₹315.00
108 திவ்ய தேச உலா (பாகம் - 3)
4 × ₹275.00
108 ஒரு நிமிடக் கதைகள்
2 × ₹400.00
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
1 × ₹200.00
108 திவ்ய தேச உலா பாகம் (பாகம் – 4)
2 × ₹275.00
30 நாள் 30 ருசி
1 × ₹205.00
Moral Stories
1 × ₹75.00
English-English-Tamil-Dictionary
1 × ₹580.00
Dr. அம்பேத்கர் தன்னிகரற்ற தேசபக்தர்
1 × ₹75.00
COMPACT Dictionary [ English - English ]
1 × ₹95.00
How the steel was Tempered
3 × ₹300.00
2400 + இயற்பியல் குவிஸ்
1 × ₹85.00
Quiz on Computer & I.T.
2 × ₹80.00
அக்கிரகாரத்தில் பெரியார்
4 × ₹275.00
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
1 × ₹235.00
108 திவ்ய தேச உலா (பாகம் - 2)
1 × ₹250.00
Compact DICTIONARY Spl Edition
1 × ₹80.00
2700 + Biology Quiz
1 × ₹80.00
Red Love & A great Love
6 × ₹220.00
The Glory That Was Tamil Culture
4 × ₹280.00
A Madras Mystery
4 × ₹225.00
English-English-TAMIL DICTIONARY Low Priced
1 × ₹150.00
2800 + Physics Quiz
4 × ₹85.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
4 × ₹170.00
Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)
2 × ₹380.00
I.A.S ஆவது எப்படி?
4 × ₹120.00
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
7 × ₹200.00
India A History Through The Ages Book - 1
1 × ₹199.00
மாபெரும் தமிழ்க் கனவு
11 × ₹470.00
தாமஸ் வந்தார்
5 × ₹200.00
நான் நாகேஷ்
2 × ₹240.00
கலைஞர் எனும் கருணாநிதி
3 × ₹250.00
பிரபல கொலை வழக்குகள்
5 × ₹220.00
Mother
1 × ₹300.00
90களின் தமிழ் சினிமா
6 × ₹120.00
200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்!
2 × ₹100.00
கனம் கோர்ட்டாரே!
5 × ₹275.00
அர்த்தமற்ற இந்து மதம் (பாகம்-1 - 2)
1 × ₹335.00
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
9 × ₹125.00
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
3 × ₹320.00
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
2 × ₹225.00
ரம்பையும் நாச்சியாரும்
11 × ₹100.00
'நமக்கு நாமே' நாயகனின் முகநூல் முத்துக்கள்
2 × ₹90.00
100 வகை கேக்குகள் வீட்டிலேயே எளிதில் தாயரிக்கலாம்!
4 × ₹50.00
Bastion
1 × ₹650.00
"செஸ்" விளையாட கற்றுக்கொள்ளுங்கள்
2 × ₹80.00
13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
1 × ₹220.00
100 கறி வகைகள்!
2 × ₹60.00
Microsoft ACCESS - எனும் தரவு தள மேலாண்மை
1 × ₹120.00
15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி
2 × ₹100.00
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
4 × ₹460.00
சஞ்சாரம்
5 × ₹440.00
கொடூரக் கொலை வழக்குகள்
6 × ₹175.00
சோழன் ராஜா ப்ராப்தி
3 × ₹140.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
4 × ₹150.00
100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
1 × ₹1,100.00
ரோலக்ஸ் வாட்ச்
3 × ₹200.00
தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
2 × ₹450.00
கருஞ்சூரியன்
1 × ₹80.00 Subtotal: ₹55,958.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹325.00 Original price was: ₹325.00.₹305.00Current price is: ₹305.00.
இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி, நுணுக்கமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை.
அயோத்திதாசர் தனி மனிதரல்ல, ஒடுக்கப்பட்டவர்களின் சுயம். அடையாளமற்றவர்களின் ஆவேசம். நூற்றாண்டுகளாகத் தாழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் குரலற்ற பெருந்திரளின் நமட்டுச் சிரிப்பு. அயோத்திதாசர் மீது படிந்திருந்த கனமான பண்டிதத் திரையை விலக்கி அவரை ஒரு மானுடராக வெளிப்படுத்தியதில் டி.தருமராஜின் பங்களிப்பு முதன்மையானது. அரசியல் கட்சிகள் தொடங்கி ஆய்வாளர்கள் வரை பலரும் அயோத்திதாசரைத் தங்களுடைய ஆதர்சமாக வரித்துக்கொண்டது அதற்குப் பிறகுதான்.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

Joseph chelladurai –
Vasuki இன்றைய தமிழகத்தின் அரசியல் பண்பாட்டு சூழலில் மிகவும் நம்பிக்கை தரக்கூடிய சிந்தனையாளராக அயோத்திதாசர் விளங்குகிறார். தமது வாழ்வின் இறுதிப் பத்து ஆண்டுகளில் அவர் முன்னெடுத்த தமிழ் பௌத்தம் என்ற சிந்தனையை மட்டுமே இப்புத்தகம் விவரிக்கிறது.
வரலாற்றில் தலித்துகளின் பங்களிப்பு, அவர்களது சிந்தனை மரபு, அவர்களது சமயம், அவர்களது சாதிய எதிர்ப்பு முயற்சிகள், அவர்களது துன்பம் போன்ற செய்திகளை உள்ளடக்கிய அயோத்திதாசரின் தமிழ் பௌத்த சிந்தனை பரவலாக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தமிழகத்தில் மிகப்பெரும் சிந்தனையாளராக விளங்கிய அயோத்திதாசர் தமிழக வரலாற்று ஆய்வாளர்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டார்.
திராவிட சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அவரை இருட்டடிப்பு செய்து அதில் கணிசமான பங்கு இருக்கவே செய்தது.
அயோத்திதாசரின் தமிழ் பௌத்த செயல்பாடுகள் 1890ல் தொடங்குகின்றன.
அவரது பொது வாழ்க்கை 1870களில் ஆரம்பித்துவிட்டது.
1881ஆம் ஆண்டு காலனிய ஆட்சியாளர்கள் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர் பௌத்தர், சமணர், கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர் போன்ற செவ்வியல் சமய அடையாளங்களை சாராத பெருவாரியான மக்களுக்கு எந்த சமய அடையாளத்தை வழங்குவது என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டது. இத்தருணத்தில் வெள்ளை அதிகாரிகளுக்கு அணுக்கமாக இருந்த உயர்சாதியினர் மேற்கூறிய பெருந்திரளான மக்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் படி ஆலோசனை வழங்கினர். அவர்களும் இம்மக்களை இந்துக்கள் என்றே குறிப்பிடும்படி கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
பழங்குடியின மக்களும் தாழ்த்தப்பட்டவர்களுமான ஆதித்தமிழர்கள் இந்நாட்டின் முதல் குடிமக்கள் அதாவது பூர்வகுடிகள் அல்லது மண்ணின் மைந்தர்கள் இம் மண்ணின் மைந்தர்களான அவர்கள் இந்துக்கள் அல்லர்.
சாதியால் ஒடுக்கப்பட்டவர்களே இந்நாட்டின் பூர்வகுடிகள் அவர்கள் என்றைக்கும் இந்துக்களாக இருந்ததில்லை என்ற இந்த இரு கோட்பாடுகளே அயோத்திதாசருடைய தமிழ் பௌத்த ஆய்வுகளுக்கு பின்னணியாக நின்றன.
தமிழ் பௌத்தத்திற்கு அயோத்திதாசர் உபயோகப்படுத்திய தரவுகளை நான்கு வகையாக பிரித்துக் கொள்ளலாம்.
1) வாய்மொழி தகவல்கள்
2) இலக்கியப் பனுவல்கள்
3) சித்த மருத்துவ தகவல்கள்
4) மொழியியல் தகவல்கள்
மேற்கூறிய அத்தனை வகையான தகவல்களையும் உள்ளடக்கியதாகவே தமிழ் பௌத்தம் என்ற கதையாடல் அமைந்திருக்கிறது.
Kathir Rath –
#அயோத்திதாசர்_பார்ப்பனர்_முதல்_பறையர்_வரை
திராவிட கட்சிகள் ஆட்சி அமைக்கவில்லை என்றால் தமிழகத்தை பொறுத்த வரை பெரியார் இன்னொரு அயோத்திதாச பண்டதராக மறக்கப்பட்டுருப்பார்.
இந்த ஒரு வாக்கியம் இந்த நூலின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியது. மதுரையில் புத்தக வெளியீட்டிற்கு செல்ல திட்டமிட்டு இயலாமல் போனது. ஸ்ருதி டீவி யூடியுப் சேனலில் வெளியீட்டு நிகழ்வு வீடியோக்கள் வெளியான உடனேயே பார்த்தேன். சென்னை புத்தக திருவிழாவிற்கு சென்றதும் முதலில் இப்புத்தகத்தைத்தான் வாங்கினேன். இதற்கு முன்பே அயோத்திதாசரை பற்றி சிறு அறிமுகம் இருந்த்து.
-நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்.
-கலப்பு திருமணம் புரிந்தவர்.
-சித்த மருத்தவ நிபுணர்.
-திராவிட சித்தாந்த்ததின் துவக்கப்புள்ளி.
-“ஒரு பைசா தமிழன்” என்று வார இதழை -புதன்கிழமை தோறும் வெளியிட்டு பின்னர் “தமிழன்” என்ற பெயரில் நடத்தியவர்.
-தென்னிந்திய சீர்திருத்தத்தின் தந்தை
-ஆதி வேதம், இந்திர தேச சரிதம் போன்றவை இவரின் முக்கிய நூல்கள்
– திருமந்திரத்திற்கு உரை எழுதியுள்ளார்
– ஆல்காட் பஞ்சமர் பள்ளிகளை துவங்கி தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி வழங்க ஏற்பாடு செய்தவர்
அவ்வளவுதான் நான் அறிந்திருந்த்து. இப்படிப்பட்ட ஒரு நபரை பெரியாருடன் ஒப்பிடவும் எனக்குள் ஆவல் துளிர்விட துவங்கியது. நான் பெரியாரையும் முழுக்க வாசித்தவன் அல்ல என்றாலும். அவரின் பிரம்மாண்டம் நாடு அறிந்த ஓன்று. வெளியிட்டு விழா உரையிலேயே எனக்கு அயோத்திதாசர்தான் பெரியோரின் முன்னோடி என்பது புரிந்து விட்டது. அதனால் “பன்முக நோக்கில் அயோத்திதாச பண்டிதர்” என்ற நூலையும் வாங்கி வந்துள்ளேன். சரி புத்தகத்த்திற்கு வருவோம்.
புத்தகம் மூன்று கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
1) நான் பூர்வ பௌத்தன்
2) இது பூர்வ பௌத்த நிலம்
3) பூர்வ பௌத்தனின் கல்லறை
இத்தலைப்புகளே அர்த்தபூர்வமானது. முதல் தலைப்பு மனிதனையும்
இரண்டாவது நிலத்தையும்
மூன்றாவது மனிதனுடன் நிலம் இணைந்த கல்லறையையும் குறிப்பிடுகிறது.
முதல் பகுதி பூர்வ பௌத்தன். அயோத்திதாசர் எங்ஙனம் தானொரு பூர்வ பௌத்தன் என தேடி கண்ட்டைகிறார் என்பதை விளக்குகிறது.
சென்னை மஹாஜனசபையின் கூட்டம் விக்டோரியா ஹாலில் நடைபெறுகிறது. அங்கு பறையரின் பிரதிநிதியாக வரும் பண்டிதர் பிராமணர்களால் விராதமாக நடத்தப்படுகிறார். அது ஏன் என்று யோசிக்க துவங்கும் பண்டிதருக்கு யாருமே எதிர்பாராத ஒரு பதில் யதெச்சையாக ஒரு சுவடியில் கிடைக்கிறது. அதில் பறையர் என்பவர் யார்? அந்த பெயரை வைத்தவர் யார்? எதற்காக என்பதன் பூர்வீகம் தெரிய வருகையில் தான் ஒரு பூர்வ பௌத்தன் என்ற உண்மையை உணர்கிறார். தனது அடையாளத்தை தேடி அவர் சென்றடையும் இடம் ஒட்டு மொத்த தேசத்திற்கு திறப்பாகிறது.
இரண்டாவது பூர்வ பௌத்த நிலம். அயோத்தி தாசர் தான் தேடி கண்ட்டைத்த பூர்வ பௌத்த அடையாளத்தோடு நில்லாமல் மொத்த சமூகத்திற்கும் மொழிக்கும் தேசத்திற்குமான பூர்வீகத்தை கண்டடைகிறார் அல்லது காண்பிக்கிறார். அதுவே யாரும் அறிந்திராத இந்திர தேசம். அதன் மறைக்கப்பட்ட வரலாறு.
மூன்றாவது பகுதியில் பண்டதர் கண்ட்டைந்த்தும் பண்டிதரை கண்ட்டைவது பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஆம், நம்மை பொறுத்த வரை பண்டதரே நம்மால் மறக்கப்பட்டவர். நாம் அவரை தேடி 100 வருடங்களுக்கு முன் செல்கையில், அவர் பூர்வ பௌத்தனை தேடி 2000 வருடங்களுக்கு முன்னே சென்று கொண்டிருக்கிறார். அவரை விடாமல் தொடர்ந்து எட்டி பிடிக்கையில் அவருடன் சேர்ந்து இந்திர தேசத்தின் துவக்கத்தில் அரச மரத்தடியில் ஐம்புலன்களையும் வென்ற ஐந்திரன் என்கிற இந்திரன் என்கிற கௌதம புத்தரின் எதிரில் நிற்கிறோம். அங்கிருந்து துவங்கும் இந்திர தேசத்தின் வரலாறு ஐரோப்பியர் வருகை வரை பண்டிதரால் சொல்லப்பட, விழி இமைக்காமல் கேட்கிறோம்.
எதற்கு இந்த இந்திர தேசத்தை பற்றி அறிய வேண்டும் என்ற கேள்வி எழும்? சரி வேண்டாம். இந்திர தேசத்தை பற்றி எதுவும் யோசிக்க வேண்டாம். இந்த புத்தகத்தையே அயோத்தி தாசரையே மறந்து விடலாம். சுதந்திரத்திற்கு பிறகு தேசத்தில் அதிகம் விவாதிக்க பட்ட விசயங்கள் எவை?
எப்படியும் முதல் மூன்று இடத்தில் மதம், சாதி ஏற்றத்தாழ்வு, தீண்டாமை கொடுமைகள் வந்து விடும். இவற்றிற்கான தீர்வை பற்றி பேசுகிறோமே, இதன் துவக்கப்புள்ளியை பற்றி தெரிய வேண்டாமா? அம்பெத்கர் ஆராய்ந்து சொன்னது தீர்வு என்றால் அந்த கண்ணோட்டம் மட்டும் அனைத்தையும் தீர்த்து விட முடிகிறதா? பெரியாரியம் அரசியலாகி ஆட்சியை பிடித்து விட்டாலும் பகுத்தறிவு அனைவரையும் சென்றடைந்து விட்டதா? நாட்டில் மூடநம்பிக்கை குறைந்து விட்டதா? சாதி ஏற்றத்தாழ்வும் கோயில் வழிபாடுகளும் எந்தளவு குறைந்துள்ளன?
இது எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும் நம் கடவுள்களாவது நம் வசம் இருக்கின்றனவா?
எப்படி எல்லா கோவில் வாசலிலும் பிள்ளையார் சிலை வந்தது?
ஆடு வெட்டும் அய்யனாராகட்டும், கோழி அறுக்கும் காளியாகட்டும் எப்படி சிவன்/விஷ்னுவின் சொந்தகார்ர் ஆனார்கள்?
நம் ஒவ்வொரு குலதெய்வங்களும் நாட்டார் தெய்வங்களும் எப்படி பாரத தேசத்தின் பொது வழிபாட்டு முறைகளுக்குள் காணாமல் போகின்றன?
அனைத்து கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது சரியா?
முழுக்க முழுக்க நமது பாரம்பரியம் பறிபோவதற்கு பெரியாரிடம் தீர்வு இருக்கிறதா?
இந்த பதிவினை படித்து பாருங்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=10213698714076291&id=1058238206
அனைவரையும் நாத்திகராக்குதல் இயலாது என்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என சொல்லி திமுக துவங்க பட்டது. சீதைக்கு எதிராக கண்ணகியையும் விவேகானந்தரை விட உயரமாக வள்ளுவரையும் தூக்கி பிடித்த கட்சிகள் குறிப்பாக கலைஞர் அயோத்திதாச பண்டிதரை கைக்கொண்டிருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட எண்ணம். இது பெரிதாக விவாதிக்கப்பட வேண்டிய விசயம், வேறு நேரத்தில் பேசலாம். புத்தகத்திற்கு வருவோம்.
என்னை பொறுத்த வரை இந்த புத்தகம் ஒரு பெரும் புதையலுக்கான வரைபடம். ஆம், அயோத்திதாசர் என்ற சிந்தனை குவியலுக்கான வழிகாட்டியாக இப்புத்தகத்தை பார்க்கிறேன்.
உண்மையில் அயோத்திதாசர் போன்ற ஒருவரைத்தான் நான் சமீபத்தில் தேடி கொண்டிருந்தேன். எதற்காக என்றால் Amish tripti போன்ற இந்துத்துவா கொள்கை கொண்டவர்கள் அவர்தம் புராணங்களை தொடர்ந்து சமகால விஞ்ஞானங்களுடன் வேதத்தை கலந்து முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல என்று திரித்து எழுதி கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சமீபத்தில் அவர் எழுதி வரும் ராமாயண தொடரில் வாலி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்கிறாராம். ஆம், ஏதாவது ஒன்று பாரம்பரியமானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டால் உடனே அவர்களின் பட்டியலில் இணைத்து கொள்வார்ரகள். இதெல்லாம் பொய் புரட்டு என்று சொன்னால் வெகுஜன மக்களுக்கு போய் சேர்ந்து விடுமா? எதிர்புராணம் வேண்டாமா? அவர்களின் புரட்டு வெளிப்பட நமக்கு ஒரு சரிதம் வேண்டாமா? இராவணனை மையப்படுத்தி வந்த “அசுரன்” கொண்டாட பட்ட போது அக மகிழ்ந்தாலும் அது இராமாயணத்தின் எச்சம்தானே? நாம் ஒடுக்கப்பட்ட வரலாறு எங்கே என்று தேடுகையில் இந்த புதையல் தென்பட்டது.
ஒவ்வொரு திருவிழாவிற்கும் ஆதாரத்துடன் மறுப்பு தருவதோடு அதன் பூர்வீக காரணத்தை கதையாக சொல்லும் பாணியை கண்டு உண்மையில் மிரண்டுதான் போனேன். உண்மையில் கார்த்திகை தீபமல்ல, கார் துல தீபம் என்பதை படிக்கையில் மயிர் கூச்செறிந்த்து. எது உண்மை? ஏன் இப்படி இருக்க கூடாது? கண் முன்னே நிறைய திரிபுகளை பார்த்து கொண்டு இருக்கையில் பண்டிதரின் வாதம் சரியாகத்தான் படுகிறது.
இந்திர தேசத்தை முழுவதும் திரும்ப திரும்ப வாசித்து அதனை மகாபாரதம் அளவிற்கு ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் விவரித்து விளக்கமாக புத்தகமாக எழுதி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன். புத்தகத்தை முடிப்பதற்கு முன்பே பல நண்பர்களிடம் இதனை பற்றி பேச துவங்கி விட்டேன்.
ஒடுக்கப்பட்டவர் வரலாறு மட்டுமல்ல, மொழியின் இலட்சணம் பற்றி இப்புத்தகத்தில் கேள்வியே படுகிறேன். நன்கு அறிந்த மொழி தமிழ் என்ற கர்வத்திற்கு சரியான அடி கிடைத்தது. அமுத எழுத்து, விட எழுத்து புரிகையில் தமிழுக்கும் திராவிடத்துக்குமான தொடர்பு புரிகிறது.
தாண்டவராயன் கதை புத்தகத்தில் மறைந்து போன நீலவேணியின் பாதையை கண்டறிய அதை அறிந்தவர்களின் வம்சாவழியை சேர்ந்த ஒரு பூசாரி அதனை தனது மரபு வழி அறிவின் மூலம் நினைவுப்படுத்த பார்ப்பார். கிட்டத்தட்ட ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவிற்குள் போதி தர்மரை தேடும் முயற்சிதான். ஆனால் ஞாபகத்தை கண்டறியும் வழி, இது அப்புத்தகத்தில் படிக்கும் போதே மயிர் கூச்செறியும். இதில் எழுத்தாளர் தர்மராஜ் அதே வழியில் அயோத்திதாசரின் கட்டுரைகளின் அகத்தினை புரிந்து கொள்ள மீள்பதிவு செய்ய முயற்சிக்கிறார். அதை விட சிறப்பு அயோத்திதாசரும் தனது மூதாதையரான பூர்வ பௌத்தரின் வாழ்வியலை பதிவு செய்ய அதே வழியை கையாளுகிறார். ஒலைச்சுவடிகளையும் மக்களின் பழக்கவழக்கங்களையும் தொடர்ந்து கூராய்வு செய்து அவர் கண்டறிந்தவை அனைத்தும் விவாதிக்க பட்டாலே சமூகத்தில் பல எரிமலைகள் வெடிக்கும்.
அயோத்திதாசர் சொல்வது அனைத்துமே பொய்யென்று யாரேனும் நிருபித்தாலும் உலகின் தலைசிறந்த கதைசொல்லியாக அவரே பிரம்மாண்டமாக நிற்பார்.
யாரும் பெரியாரையும் அயோத்திதாசரையும் எதிரெதிரே நிறுத்தி குழப்பி கொள்ள வேண்டாம். இருவரின் நோக்கமும் ஒன்றுதான், தமிழின முன்னேற்றம். அதற்காக சிந்தித்தவர்கள் இருவரையுமே கொண்டாடலாம்.
நான் அயோத்திதாசரை முழுவதும் அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.
சமூகத்தின் மீது அக்கறை இருப்பவர்கள் , கதைகளில் விருப்பம் கொண்டவர்கள், வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்கள், மொழியை நேசிப்பவர்கள் என அனைவரும் இந்த புத்தகத்தை வாசிக்க பரிந்துரைக்கிறேன்.
நானும் மறுவாசிப்பு பலமுறை செய்தால்தான் இன்னும் நன்றாக புரிந்து கொள்ள இயலும். 5-6 வருடம் ஆனாலும் சரி, அயோத்திதாசரின் எழுத்து தொகுதிகளை நிதானமாக வாசித்து அவர் சிந்தனையை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.