பஷீரின் ‘எடியே’

Publisher:
Author: ,

90.00

பஷீரின் ‘எடியே’

90.00

Basheerin ‘Ediyee’

Fabi Basheer

 

வைக்கம் முகம்மது பஷீர் மலையாளிகளின் இலக்கியப் பெருமிதம். வாழ்ந்து எழுதியபோது அவருக்கு வாய்த்த புகழ் இன்று பலமடங்கு பெருகியிருக்கிறது. ஒவ்வொரு வாசகனும் தன்னுடையதென்று தனி உரிமை பாராட்டும் அளவு அவரது படைப்புகள் வாசக நெருக்கம் கொண்டிருக்கின்றன. படைப்பின் மூலம் அறியப்படும் பஷீரை விடவும் படைப்பை மீறி அறியப்படும் பஷீர் பேரபிமானத்துக்குரியவராக மாறியிருக்கிறார். பஷீர் படைப்புகளுக்கு நிகராகவே பஷீர் என்ற ஆளுமையைப் பற்றியும் அதிக நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஃபாபி பஷீரின் நினைவோடை நூலும் அதில் ஒன்று. ஆனால் முற்றிலும் மாறுபட்டது. இலக்கிய ஆளுமையாகவும் பண்பாட்டு நாயகராகவும் அறியப்பட்ட பஷீரை அன்பான கணவராகவும் வாஞ்சை மிகுந்த தந்தையாகவும் நம்பகமான தோழராகவும் எளியவர்களின் வரலாற்றாளனாகவும் உன்மத்தம் பீறிடும் படைப்பாளியாகவும் ஃபாபி இந்த நினைவுக் குறிப்புகளில் முன்னிறுத்துகிறார். ஏறத்தாழ நான்கு பதிற்றாண்டுகள் அவருடன் இணைந்து வாழ்ந்த ஃபாபி மகத்தான இந்த இலக்கியவாதியின் அகத்தையும் புறத்தையும் வெளிப்படுத்துகிறார். உண்மையின் தீவிரம் மிளிரும் இந்த வெளிப்படுத்தல் வைக்கம் முகம்மது பஷீரை இன்னும் நெருக்கமானவராகவும் இன்னும் மேலானவராகவும் துலக்கப்படுத்துகிறது. படைப்புக்காக வாழ்ந்த எழுத்துக் கலைஞரின் வாழ்வையே மாபெரும் படைப்பாகக் காண வழி அமைக்கிறது.

Delivery: Items will be delivered within 2-7 days