டேவிட்டும் கோலியாத்தும்

Publisher:
Author:

300.00

டேவிட்டும் கோலியாத்தும்

300.00

மனிதனின் எத்தகைய பலமும் அதைப் பிரயோகிக்க முடியாத இடங்களில் பயனற்றதாகவே போகும். எங்கு பலம் எடுபடுகிறதோ அங்கு தான் அது வரவேற்பும், வெற்றியும் பெறுகிறது. அறிவால், ஆற்றலால் பலவீனமான பலர், தம்மிடமுள்ள ஒரே பலத்தால், உத்தியால், பயிற்சியால் மிகப்பெரும் பலவான்களையும்  வெற்றி கண்டதாக சரித்திரம் சொல்கிறது.
புறச்சூழலில் உள்ள சில களங்களைப் பார்த்து, வாழ்க்கையில் தன்னைப் பற்றி தாழ்வாக எண்ணி அஞ்சுபவர்கள், தம்மிடம் மறைந்துள்ள பலத்தையும் கண்டறிய வேண்டும். வாழ்க்கையை வெல்ல அந்த பலம் ஒன்று போதும். இந்தச் சூழலுக்கு நாம் பொருந்தாதவர்கள் என்று முடங்குபவர்களுக்கான போராட்டக் கலையை பல்வேறு சம்பவங்கள் மூலமாக இனம் காட்டுகிறது இந்நூல்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன், போரில் ஆபத்தானவர்களாகக் கருதப்பட்ட பாலஸ்தீனர்கள், ஜென்மப் பகை கொண்ட இஸ்ரேலியரை அஞ்ச வைக்க, 6 அடி, 9 அங்குல கோலியாத் எனும் மாவீரனை, ‘ஒண்டிக்கு ஒண்டி’ சண்டைக்கு அனுப்ப, இஸ்ரேலியர் எவரும் அதற்கு முன்வராத நிலையில்,  ஒரு ஆடு மேய்ப்பவன் வந்து சாதாரணமாக கோலியாத்தை வெற்றி கொள்கிறான்.
இந்தக் கதையின் அடிப்படையில், பலவீனமானவர்கள் பலரது வெற்றிச் சம்பவங்களை தொகுத்து வழங்கி இருக்கிறார், நூலாசிரியர் மால்கம் கிளாட்வெல். இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் சித்தார்த்தன் சுந்தரம். கூடைப்பந்தில் அனுபவம் இல்லாத குட்டைப் பெண்களை அதிகமாகக் கொண்ட  அணிக்கு, புதிய முறையில் பயிற்சியளித்து வெற்றி பெற வைத்த, வாழ்நாளில் கூடைப்பந்து விளையாடாத விவேக் ரணதிவே; அரேபியப் புரட்சியில்,  வலிமையான துருக்கி ராணுவத்தைக் கலங்கடித்த டி.இ.லாரன்ஸ் எனப் பலரது போராட்டங்கள் வியக்க வைக்கின்றன.
பத்து வயது வாக்கில் குளிர்காலத்தில் தெருக்களில் பனிக்கட்டி பொறுக்கி, இலையுதிர் காலத்தில் காய்ந்த இலை, சருகுகள் பொறுக்கி, பிற தாழ்ந்த வேலைகளையும் சூழலுக்கேற்ப செய்து, பிற்காலத்தில் ஹாலிவுட்டில் பெரிய செல்வந்தரானவரின் கதையில் ஜேம்ஸ் க்ரப்மேனின்  தத்துவம் தன்னம்பிக்கை ஊட்டுபவை. பலவீனமாக எவரும் தன் செயல் உத்திகளால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும் என்பதே நூலின் சாரம்.
ஒவ்வொரு சம்பவத்தையும் வேறு அத்தியாயங்களிலும்  இடைச்செருகலாக்கிக் கொண்டு செல்வது, சரளமான வாசிப்பில் நெருடலை ஏற்படுத்துகிறது. நீண்டு செல்லும் விளக்கங்களைச் சுருக்கித் தந்திருந்தால், நூலின் சுவை கூடியிருக்கும்.

– மெய்ஞானி பிரபாகரபாபு

நன்றி – தினமலர்

Delivery: Items will be delivered within 2-7 days