கள்ளர் சரித்திரம்:
இந்நூல் 1923-ஆம் ஆண்டில் வெளியான பொழுது பல சிறந்த புலவர்களின் மதிப்புரையையும், பல பத்திரிக்கைகளின் பாராட்டுரையையும் பெறுவதாயிற்று. சங்க இலக்கியங்களும், இலக்கணங்களும், புராணங்களும், பிரபந்தங்களுமாக அளவில்லாத தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளிப்படுத்தி வரும் சான்றோராகிய
மகா மகோபாத்தியாயர் ஸ்ரீமத் உ.வே.சாமிநாதையரவர்கள் தாம் இதனை முழுதும் படித்துப் பார்த்ததாகவும், கலாசாலை மாணாக்கர்கள் படித்துப் பயனெய்துமாறு இது பாடமாக வைக்கத் தகுந்தது எனத் தாம் கருதுவதாகவும் அன்புடன் தெரிவித்தார்கள் என்பதனை இங்கே குறிப்பிடுகின்றேன்.
– ந.மு. வேங்கடசாமி நாட்டார்
Reviews
There are no reviews yet.