Konjum Pesalam
தினகரன் நாளிதழுடன் இலவச இணைப்பாக வழங்கப்படும் ‘தினகரன் ஆன்மிக மலர்’, அது இலவசம்தான் என்ற அலட்சியம் நீக்கி, பொக்கிஷமாகப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பாதுகாக்க வைத்தது என்றால் அதற்கு ‘கொஞ்சம் பேசலாம்’ தொடரும் ஒரு முக்கியக் காரணம் எனலாம். ‘கொஞ்சம் பேசலாம்’ வழியாக வாரந்தோறும் லட்சக்கணக்கான வாசகர்களை சந்தித்ததோடு, தன் உள்ளார்ந்த கருத்துகளையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார் திருமதி ஆண்டாள் பிரியதர்ஷினி.
பல வாசகர்கள் தாம் கொண்டிருந்த சில குழப்பங்களுக்கு, புதிர்களுக்கு, சந்தேகங்களுக்கு இந்தக் கட்டுரைத் தொடர் சரியான விளக்கமும், தீர்வும், நிவர்த்தியும் அளித்திருப்பதாக சந்தோஷமாகத் தெரிவித்திருக்கிறார்கள். எந்தப் பிரச்னையையுமே ஆன்மிகத்துடன் இணைத்துப் பார்க்கும் பக்குவத்தை இந்த நூல் உங்களுக்குத் தரும். அது மட்டுமில்லை… ஆன்மிக வழியிலேயே எல்லா வகை பிரச்னைகளுக்கும் தீர்வு காண இயலும் என்றும் வலியுறுத்துகிறார் ஆண்டாள் பிரியதர்ஷினி. அதைப் பல உதாரணங்கள் மூலமாக நிரூபிக்கவும் செய்கிறார். அந்தத் தொகுப்பு இப்போது புத்தகமாக உங்கள் கரங்களில் தவழ்ந்துகொண்டிருக்கிறது, ஆன்மிக, ஆத்மார்த்த உணர்வுகளுக்கு அறுஞ்சுவை விருந்தாக.

அக்கிரகாரத்தில் பெரியார்
Dravidian Maya - Volume 1
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது 
Reviews
There are no reviews yet.