மோடி மாயை
ஊழல் ஒழியவில்லை. கறுப்புப் பணம் ஒழியவில்லை. லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் என்னும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கங்கை கூட இன்னமும் தூய்மையாக்கப்படவில்லை.அப்படியானால் ’ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத’ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சாதித்ததுதான் என்ன?இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கடுமையாகச் சரிந்திருக்கிறது. குறு, நடுத்தர மற்றும் சிறுதொழில்கள் நலிவடைந்துள்ளன. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்தியா முழுக்க வெறுப்பு அரசியல் வலுவடைந்திருக்கிறது.மதவாதப்போக்கும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்திருக்கின்றன. பசுவின் பெயரால், மதத்தின் பெயரால், தேசத்தின் பெயரால் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. சவுக்கு சங்கரின் இந்தப் புத்தகம் நரேந்திர மோடி என்னும் பிம்பத்தையும் அதை உயர்த்திப் பிடிப்பதற்காகக் கட்டமைக்கப்படும் கட்டுக்கதைகளையும் ஒவ்வொன்றாக உடைத்து நொறுக்குகிறது. குஜராத் மாடல் தொடங்கி ரஃபேல் ஊழல் வரை மோடியின் அரசியல் என்பது மக்கள் விரோத அரசியல்தான் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது.ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, சமூக நீதி ஆகிய விழுமியங்கள்மீது அக்கறை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் உள்ளத்தில் ஏந்த வேண்டிய அரசியல் அறிவாயுதம் இது.

பிரபல கொலை வழக்குகள்
மூதாதையரைத் தேடி...
அடையாளங்கள்
அறமும் அரசியலும்
அகல்விளக்கு 


Reviews
There are no reviews yet.