Oru koppai thanneer thaththuvamum kaadhalatra muththangalum
ஒரு சமூகத்தைப் புரிந்து கொள்ளாமல், அச்சமூக மனிதர்களின் விடுதலையை வென்றெடுக்க முடியாது என்ற இயங்கியல் பார்வை பெண் விடுதலைச் செயல்பாட்டிற்கும் பொருந்தக்கூடியது. அவ்வகையில், சமூகத்தில் பெண்களின் தாழ்நிலைக்குக் காரணமானவற்றையும் அத்தாழ்நிலையிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்துமான கருத்தாடல்கள் பலராலும் பரவலாக முன்மொழியப்பட்டுள்ளன. இருப்பினும் மார்க்சியம்தான் பெண் விடுதலை குறித்த இயங்கியல் பார்வையைக் கொண்டிருக்கிறது.
-பெண் விடுதலை குறித்த மார்க்சிய கருத்தாடல்கள் இன்றைய சமூகத் தேவையாக அமைந்திருக்கின்றன. அவை, பெண் விடுதலையின் சரியான திசை வழியை அடையாளப்படுத்தும் அதேவேளையில் இன்றைக்கும் பரவலாகப் பேசப்படும் நவீன வகையிலான விடுதலைச் சிந்தனைப்பாடுகளை மார்க்சியப் பார்வையில் புரிந்துகொள்வதற்கும் துணை செய்கின்றன. அந்தவகையில் லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட பெண் விடுதலை குறித்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.
Reviews
There are no reviews yet.