1 review for பாளையங்கோட்டை : ஒரு மூதூரின் வரலாறு
Add a review
You must be logged in to post a review.
₹90.00
இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம் ‘ஸ்ரீ வல்லப மங்கலம்’ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது. பண்டைய காலம், இடைக்காலம், ஆங்கிலேயர்காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது. வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நகரம் பற்றிய ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாக இச்சிறு நூலைக் கொள்ளலாம்.
Delivery: Items will be delivered within 2-7 days
ப.தாணப்பன் –
#பாளையங்கோட்டை..
#ஒருமூதூரின்வரலாறு..
#தொபரமசிவம்..
#சநவநீதகிருஷ்ணன்..
சிறிய தடைக்கல்லைத் தாண்டி இந்த நூல் வெளிவந்திருக்கிறது என்று தொப கூறுகின்றார். வாசித்து முடித்த பின்பு தெரிகிறது ஏன் அவ்வாறு செய்திருக்கவேண்டும் என்று? தம்மூரின் பெருமையை வரலாற்றினைச் சொல்லக் கூட உரிமை கிடையாதா.?
பாளையங்கோட்டையின் மத்தியில் இருக்கும் கோபாலசாமி கோவிலில் துவங்குகின்றது கட்டுரை. எவ்வாறு எல்கைகளைக் கொண்டிருந்தது கோட்டை எனச் சொல்லி எச்சமாக நிற்கும் இடத்தையும் நம் கண்முன் காட்டுகின்றார். தற்போது அருங்காட்சியகம் இருக்கும் இடமும் மேடை போலீஸ் ஸ்டேஷன் என்று சொன்ன இடமும்தான் அவை.
தற்போதிருக்கும் பிரசன்ன விநாயகர் கோவில் இருந்த இடம் தங்குமிடமாகவும் அதன எதிரே கிணறு உண்டு எனவும் காண்பிக்கின்றார். பாளை பேருந்து நிலையம் எதிரே நிற்கும் வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலை இருக்கும் இடமும் கோட்டையின் எச்சமே. பாளையங்கால்வாய்க்கு முந்தைய பெயர் நாரதகால்வாய். கி.பி. 1010ஆவது ஆண்டு கல்வெட்டு சான்றாகியிருக்கிறது.
கோட்டைக்கு வடக்கு வாயில் வடவாயில் செல்வி என்ற பெயருடன் அம்மன் கோவில் அமைக்கப்படுவது வழக்கம். தற்போதைய முப்பிடாரி அம்மன் கோவில் அதுவே என்றும் சான்றுரைக்கின்றார்.
ராமசாமி கோவில் தெப்பக்குளத்திற்கு நாரதக்கால்வாயிலிருந்து தண்ணீர் வருகிறது. சிவன் கோவில் தெப்பக்குளத்துக்கு வந்த பாதை அடைபட்டிருக்கிறது. எனவே தெப்பக்குளம் தூர்ந்துவிட்டிருக்கிறது என்கிறார்.
பழைய சிவன் கோவிலின் எச்சமாய் தற்போது எஞ்சியிருப்பது நந்திகளே என்று சொல்லி தலைமை தபால் நிலைய வாசலில் அமர்ந்திருக்கும் நந்தியைக் காண்பிக்கின்றார். எத்தனை தடவை கடந்திருப்போம் அந்த இடத்தினை. அறிந்திருக்கவில்லைதானே..?! அதன் எதிரே தற்போது போலிஸ் ஸ்டேஷன் இருக்குமிடம் இராணுவத் தளவாடங்கள் இருந்த இடம் என்றும் சொல்லி முதன் முதலாக கிறித்தவ மதம் பரப்ப வந்த கோகிலா எனும் இயற்பெயருடைய கிளாரி்ந்தா அவள் கட்டிய சிறு பள்ளி ,சர்ச், வெட்டிய பாப்பாத்திக்கிணறு.. என விரவிக் கிடக்கிறது சான்றுகள்.
இங்கிலீஷ் சர்ச் ஆங்கிலேயப் படைவீரர்களுக்காகக் கட்டப்பட்டது. விதிதோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களைப் போட்டு சாத்திரங்களை தமிழில் செய்ய வேண்டும் என்று சொன்ன பாரதிககு முன்பே அதனைச் செய்தவர் ரெயினீஸ் ஐயர். அவர் அறிமுகம் செய்த அறிவியல் தமிழ்ச் சொற்கள் வியக்க வைக்கின்றது. (North pole என்பது வடமுனை Circumference என்பது சுற்றளவு)163 பள்ளிகளைத் தொடங்கியவரும் அவரே. சாதீய வேறுபாடு விசயத்தில் ‘சீர் தூக்கல் என்ற துண்டு பிரசுரம் வெளியிட்டதற்காக நீக்கம் செய்யப்படுகின்றார் ரெயினீஸ் ஐயர். அவருக்கு மறுக்கப்பட்ட வழக்கமான கல்லறை இடம், வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆஷ் துரை கல்லறை என இடங்கள்.. போன்ற தகவல்களும் உண்டு.
ஆயிரத்தம்மன் கோவில் அதன் உள்ளே இருக்கும் நவகண்டச்சிற்பம். ( பாளையில் வசிக்கும்போது தினந்தோறும் நாள் தவறாது சென்ற எனக்குக்கும் கூட சரியாக நினைவினில் இல்லை அச்சிற்பம்) நடைபெறும் திருவிழா..என்பது போன்ற செய்திகளும் உண்டு.
சிலதுளிச் செய்திகளில் 1876ம் ஆணடு ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தின் போது ஆங்கிலேய அரசு கைக்குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கியது. இந்தக் கட்டடம் இன்றளவும் பாலாஸ்பத்திரி என அழைக்கப்படுகிறது என்ற செய்தியும் உள்ளது.
பாளையங்கோட்டையில் இருப்போர் முதற்கொண்டு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆவணம் இப்புத்தகம்.
#பாளையங்கோட்டை
#ஒருமூதூரின்வரலாறு
#தொபரமசிவன்
#சநவநீதகிருஷ்ணன்
#காலச்சுவடுபதிப்பகம்
#விலை ரூ. 80
#பக்கங்கள் 70.