அசோகமித்திரனின் இந்த புத்தகத்தை நாவல் வரிசையில் சேர்ப்பதை விடவும் வரலாற்று சம்பவங்களை கோர்த்து எழுதிய ஒரு நூல் எனக் கொள்ளலாம். ஐதராபாத் சமஸ்தானம் இந்திய சுதந்திரத்திற்கு கொஞ்ச வருடத்திற்கு முன்பிலிருந்து ஆரம்பிக்கிறது. நூலின் நாயகன் சந்திரசேகரன் கல்லூரி மாணவன். அவனின் குடும்பம் வசிக்கும் லான்சர் பராக்சின் குடியிருப்புகளிலிருந்து ஆரம்பிக்கும் கதைப் போக்கு அவன் படிக்கும் கல்லூரி, அவன் சைக்கிளில் சுற்றிவரும் டாங்க் பண்ட் சாலை, செகந்திராபாத், மோன்டா என கதையின் களம் அமைந்திருக்கிறது.
நகரத்தில் ரஜாக்கர்கள் நடத்தும் அராஜகங்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தும் க்விட் காலேஜ் இயிஅக்கம் (ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கான இயக்கம்) என இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த நிஜாம் பிரதேச இணைப்பு தொடர்புடைய நகிழ்வுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நிஜாம் காலத்து ஐதராபாத்தை அந்த டாங்க் பண்ட் சாலையோரத்தில் நடந்தபடியே குளிர்ந்த காற்றின் சுகந்தத்தோட ரசிக்க வைத்திருக்கிறார். பருவத்தில் ஒரு இளைஞனின் மன ஊசலாட்டங்களை சந்துருவை கருவியாக வைத்து வெளிப்படுத்தியிருக்கும் இடங்கள் அந்த பருவத்தின் நிஜத்தை ஒத்திருக்கின்றன.
காந்தி இறந்த போது அவர்கள் குடும்பமும், அந்த நகரமும், சந்திரசேகரனின் அழுகையும், மன அழுத்தமும் ஒரு சிறு சலனத்தை நம்முடைய மனநிலையிலும் தந்துவிட்டுப் போகிறது. இந்திய யூனியனுடன் நிஜாம் பிரதேசத்தை இணைப்பதற்காக இந்திய யூனியன் அரசாங்கம் நிஜாம் பிரதேசத்தின் மீது ஏற்படுத்திய பொருளாதாரத் தடை. அதன் பலனாக ஏற்படும் தானியத் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் இல்லாததால் கடலையெண்ணையில் ஓடும் நகரப் பேருந்துகள்… பஜ்ஜி, போண்டா சுடும் வாசனையோடு போகும் பேருந்துகள் என அப்போதைய காலகட்டங்களை ஒரு வரலாற்று பதிவாக சந்திரசேகரன் என்னும் மாணவனின் வழியாக தன் பால்ய கால ஐதராபாத்தின் நினைவுகளை அசோகமித்திரன் நம்முடன் பகிர்ந்து கொள்கிற படைப்பு இது.
– ர.கேசவராஜ்

Caste and Religion
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Alida
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
English-English-TAMIL DICTIONARY
One Hundred Sangam - Love Poems
1975
Arya Maya (THE ARYAN ILLUSION)
5000 GK Quiz
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
5000 பொது அறிவு
1777 அறிவியல் பொது அறிவு
16 கதையினிலே
Moral Stories
COMPACT Dictionary [ English - English ]
Quiz on Computer & I.T.
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Compact DICTIONARY Spl Edition
2700 + Biology Quiz
Red Love & A great Love
A Madras Mystery
English-English-TAMIL DICTIONARY Low Priced
2800 + Physics Quiz
Mother
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
Bastion 


Reviews
There are no reviews yet.