புத்தரும் அவர் தம்மமும் – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்:
புத்தர் மானுடத்தின் ஒருமையை சமத்துவத்தைப் பிரகடனப்படுத்தியவர்.
சாதி, இன ஏற்றத்தாழ்வை கடுமையாய் எதிர்த்தவர்.
அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக் காட்டியவர்.
“கீழ்ச்சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல்சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ போலவே ஒளிவிட்டு எரிந்திடும்”
“மேல்சாதி எனப்படும் ஒருவன் தாயிடமிருந்து பிறப்பது என்பது கீழ்ச்சாதி எனப்படும் ஒருவன் தாயிடமிருந்து பிறப்பதினின்று ஒரு துளி கூட வேறுபட்டதன்று.”
எந்த இனத்தைச் சார்ந்த மனிதராயினும் பிணி, மூப்பு, இறப்பு ஆகியவற்றுக்கு ஆட்படுவர்.
சாதி, இனம், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பேதம் காண எந்தக் காரணமும் இல்லை.
பிறப்பால் எவரும் கீழ்சாதி இல்லை.
பிறப்பால் எவரும் மேல்சாதி இல்லை.
மனிதகுலத்தைப் பிரிப்பது அவர்தம் செயல்களே அன்றி பிறப்பல்ல.
– என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் துக்கமான சாதீய அடுக்குமுறையை உள்ளடக்கிய பார்ப்பனீய சதுர்வருணக் கோட்பாட்டையும் (நால்வருணக் கோட்பாடு ) அவற்றை நியாயப்படுத்த உண்டாக்கப்பட்ட கடவுள், கர்மவிதி, ஆன்மா, மறுபிறப்பு, யாகம் – பலிகொடுத்தல் ஆகிய மூட நம்பிக்கைகளையும் முதன்முதலாக எதிர்த்து சாட்டையை சுழற்றிய மாபெரும் புரட்சியாளர் புத்தர் என்பதை ஆதாரப்பூர்வமாக தர்க்கரீதியான விவாதங்களோடு ஆணித்தரமாக நிறுவியுள்ளார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தனது இறுதிப் படைப்பான Buddha and His Dhamma என்ற நூலில்.

Dravidian Maya - Volume 1
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
Elementary Principles of Philosophy
English-English-TAMIL DICTIONARY
English-English-TAMIL DICTIONARY Low Priced
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் 
Reviews
There are no reviews yet.