இந்திய தேசம் சுதந்திரத்திற்குப் பிறகு எதிர்கொண்ட பிரச்சினைகளில் முதன்மையானதும் பத்திரிகைச் சுதந்திரம் போன்றவை கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதும் நிகழ்ந்த காலம். நாட்டின் சமூக பொருளாதார கலாசார கலை படைப்புகளில் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்திய காலகட்டம். அந்த நிகழ்வானது ஒரு எழுத்தாளனின் ஆன்மாவை எந்தளவு குலைத்திருக்கும்? அதற்கு அவனது எதிர்வினை என்ன? அந்தச் சூழலை அவன் எப்படி தனது படைப்பில் பிரதிபலித்திருக்கிறான் என்பதை ‘இன்று’ வாசித்து உணர்ந்து கொள்ளலாம்.
இன்று
Publisher: நற்றிணை பதிப்பகம் Author: அசோகமித்திரன்₹75.00
‘அசோகமித்திரனின் ‘இன்று’, எமர்ஜென்சி காலத்து இந்தியச் சூழலை நினைவுபடுத்தும் நாவலாகத் தோன்றினாலும், எந்தக்காலத்து ‘இன்று’வுடனும் தொடர்புப்படுத்திப் பார்த்து வியக்கும் சாத்தியங்கள் இதில் அநேகம்.
இந்நாவலின் கட்டமைப்பு தமிழ்ச்சூழலுக்கு முற்றிலும் புதிதானது. சொற்பொழிவுகளாகவும் கட்டுரை வடிவிலும் கதையோட்டமாகவும் கவிதையாகவும் விரிந்தாலும் நாவலின் மையப்புள்ளி மிகச் சுலபமாக அடையாளம் காணக்கூடியதுதான்.
இன்றைய நவீன தமிழ் நாவல்கள் அனைத்துக்கும் இதுவே முன்னோடி. ‘
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.