‘கடவுச்சீட்டு’ – கதைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் பெயர்களும், அவர்களின் இயங்கு தன்மையும் தனக்கென தனி முத்திரையை பளிச்சென்று மின்னி இந்நாவலுக்கு மெருகேற்றுகிறது. மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் தாய் மண்ணையும், தன் சுயத்தையும் மறக்க முடியாமல் தவிப்பதையும், தன் சகமனிதனுக்குள் தேடும் மனிதத்தையும், அதற்காக அவர்கள் படும் துடிப்பையும், ஒரு திட்டமிடப்படாத பயணத்தில் சந்திக்கும், பல மேடுபள்ளங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும், சொல்லியிருப்பது இந்நாவலின் சிறப்பு.
கடவுச்சீட்டு(passport) – வெளிநாடுகளில் குடியிருக்கும் ஒரு மனிதனின் அடையாளம்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதே கடவுச்சீட்டு ஒரு மனிதனின் அடையாளத்தையும், முகவரியையும், சிதைப்பது எவ்வளவு பெரிய கொடுமை என எண்ணும்போது அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைத்துவிடுகிறது இக்கதை.
Reviews
There are no reviews yet.