உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் – உள்முகங்களை – வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை.

கொடூரக் கொலை வழக்குகள்
உடைந்த நிழல்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
அறியப்படாத தமிழகம்
அறியப்படாத தமிழகம்
இந்து தேசியம்
இதுவே சனநாயகம்!
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஐந்து வருட மௌனம்
தேர்ந்தெடுத்த சுரதா கவிதைகள்
தாய்ப்பால்
துருவன் மகன்
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
தமிழ் கவிதையியல்
நரபட்சணி
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாரஸ்வதக் கனவு
பையன் கதைகள்
கிராம கீதா
கார்மெலின் 


Reviews
There are no reviews yet.