PATTI VEDHALAM VIKKIRAMATHITHAN KATHAIGAL
புத்தக மதிப்புரை நாள் : 22.07.20 ( தினத்தந்தி)
நமது பழம் பெருங்கதையில் ஒன்றுதான் விகரமதித்தன் கதை. இதை முதன் முறையாக பல மொழ் மூலங்களிலிருந்து தொகுத்து முழுமையாக இந்நூலில் வடித்துள்ளார் இந்நூலாசிரியர் உஜ்ஜையினி மாகாளி பட்டணத்தை நிறுவி. அதைத் திறம்பட ஆட்சி நடத்திய மகாராஜா விக்கிரமாதித்தன். தன் அரசகவாராசியான கதையில் தொகுப்பே இந்நூல். இக்கதையில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று – இதில் வரும் பட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் ஆகியோரைப் பற்றியும், விக்கிரமாதித்தன் பராக்கிரம்ம பற்றியும். அவன் ஆட்சி புரிய 32 படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு தெய்வீக சிம்மாசனம் இந்திரலோகத்தில் இந்திரனிட அதில் ஆயிரம் வருடங்கள் அமர்ந்து ஆட்சி புரிய வரம் வாங்கி வந்த விக்கிரமாதித்தன் எப்படி 2000 வருடங்கள் வாழ்ந்தான் என்பது பற்றியும், அவன் வாழ்ந்த காலத்தில் சிந்தித்த பல்வேறு விந்தைகள், விசித்திரங்கள் பற்றியும் அறியலாம்.
இரண்டாவது பகுதியில், போஜராஜன் என்ற மன்னனுக்கு அந்த சிம்மாசனம் எப்படி கிடைத்தது ? அந்த சிம்மாசநத்தை வைத்து, அதில் ஏறி அமர முற்படும்போது, அதன் ஒவ்வொரு படிக்கட்டிலும் அதற்கான ஒரு பதுமை என்று மொத்தம் 32 பதுமைகள் இருந்ததையும், அவை ஒவ்வொன்றும் விகிரமாதித்தன் காலத்தில், ஒரு வேதாளம் மூலம் அவனுக்கு நிகழ்ந்த விந்தைகளும், விசித்திரங்களும் நிறைந்த வீர தீர சம்பவங்களை போஜராஜனுக்குக் குறுகின்றன. இப்படி விக்கிரமாதித்தனின் பராக்கிரமத்தை, துப்பரியும் நாவலைப் போன்று விரிக்கிறது இந்நூல்.
இப்படி விக்கிரமாதித்தனின் பராக்கிரமத்தை, துப்பறியும் நாவலைப் போன்றுதும் சிறுவற்கள் முதல் பெரியவர்கள் வரை விறுவிறுப்பாக படிக்கும் வித்தில் நல்ல சித்திரங்களுடனும், உறுதியன பைண்டிங்கிலும் இந்நூல் வெளியாகியுள்ளது.
– பரக்கத்.
Reviews
There are no reviews yet.