பிரபாகரன்: வாழ்வும் மரணமும்
Publisher:
கிழக்கு பதிப்பகம் Author:
பா.ராகவன்
₹200.00 Original price was: ₹200.00.₹195.00Current price is: ₹195.00.
பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது.
முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்போது இல்லை.
ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை‘மாவீரர் மரணம்’ என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது.
அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள்.
எப்படி இந்த மனிதர் இத்தனை லட்சம் பேரை பாதித்தார்? ஒரு தீவிரவாதியாகவும் சமூக விரோதியாகவும் கொலைகளில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தவராகவும் இருந்தால், அவரது மரணம் இப்படியா அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கும்? இப்படியா தமிழினத்தைக் கதறவைத்திருக்கும்?
பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது.
ஈழ யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயம் எழுதப்பட்டுக்கொண்டிருந்த இந்நூலின் சில அத்தியாயங்கள், குமுதம் வார இதழில் தொடராக (s/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை என்னும் தலைப்பில்) வெளிவந்தன என்பது ஒரு தகவலுக்காக.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.