இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

புத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன்?
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
உடைந்த நிழல்
அந்த நாளின் கசடுகள்
பணத்தோட்டம்
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
யுகத்தின் முடிவில்
சோசலிசம்தான் எதிர்காலம்
சீர்மல்கு காரைக்கால்
தவளைகளை அடிக்காதீர்கள்
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
மொழிப் போரில் ஒரு களம்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
சூரியனைத் தொடரும் காற்று
புறநானூறு (முதல் பாகம்)
பலன் தரும் ஸ்லோகங்கள்
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
ஆலமரத்துப் பறவைகள்
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
கவிதா
அறிவாளிக் கதைகள்-2
ஞானக்கூத்தன் கவிதைகள்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
சோசலிசத்தை நோக்கி நீண்ட மாற்றம் முதலாளித்துவத்தின் முடிவு
வெற்றி நிச்சயம் (மாணவர்களுக்கு)
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
ஆரிய மாயை
சக்தி வழிபாடு
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
அண்ணா சில நினைவுகள்
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
போர்க்குதிரை
பிரதமன்
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
தமிழ் மலர்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
பிஜேபி ஒரு பேரபாயம்
பண வாசம்
கிராமத்து தெருக்களின் வழியே
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
அபிமானி சிறுகதைகள்
ஜோன் ஆஃப் ஆர்க்
சாதியும் தமிழ்த்தேசியமும்
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
சுஜாதாவின் கோணல் பார்வை
முத்துப்பாடி சனங்களின் கதை
கலை இலக்கியம்
மீறல்
காலங்களில் அது வசந்தம்
வெள்ளமெனப் பொழிந்த பொழுதுகள்
பள்ளிக்கூடத் தேர்தல்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
கற்றுக்கொடுக்கிறது மரம்
இரவல் சொர்க்கம்
உப்பு நாய்கள்
புன்னகையில் புது உலகம்
அறிவுத் தேடல்
இந்திய பயணக் கடிதங்கள்
சேர மன்னர் வரலாறு
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
நிறைய அறைகள் உள்ள வீடு
தலை சிறந்த விஞ்ஞானிகள்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜென் கதைகள்
குமாஸ்தாவின் பெண்
மதமும் மூடநம்பிக்கையும்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
பாரதி செல்லம்மா
பதிப்புகள் மறுபதிப்புகள்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
பச்சைக் கனவு
அவலங்கள் 


Reviews
There are no reviews yet.