MAHA BHARATHAM
இராமாயணமும், மகா பாரதமும்தான் நம் தேசத்தில் பாமர – பண்டித பேதமின்றி எல்லோருக்கும் இரண்டு கண்கள் போல இருந்துகொண்டு யுகாந்தரமாக நல்ல வழியைக் காட்டி வந்திருக்கின்றன. இந்த இரண்டையும் புராணங்களோடு சேர்க்காமல், தனி ஸ்தானம் கொடுத்து ‘இதிஹசங்கள்’ என்று வைத்திருக்கிறது. இதிஹாசம் என்பது ‘இதி-ஹ-ஆஸம்’ – இப்படி நடந்தது – என்று அர்த்தம். புராணங்களை வேதத்துக்கு உபாங்கமாகச் சொன்னால், இதிஹாசங்களை வேதத்துக்கு ஸமானமாக உயர்த்திச் சொல்லியிருக்கிறது. பாரதத்தை ‘பஞ்சமோ வேத!’ – ஐந்தாவது வேதம் என்று சொல்லியிருக்கிறது. இந்த சினிமா, ட்ராமாக்களினால் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஹானிகள் இல்லாமல் பாரதக் கதை கேட்டே அவர்கள் ஸத்யத்துக்குப் பயந்து கபடு, சூது இல்லாமல் நல்ல வாழ்க்கை நெறியில் போனார்கள். பாரதத்துக்கு இந்தத் தமிழ் தேசத்திலிருக்கிற மதிப்பு, கிராம தேவதை ஆலயத்தை ‘திரௌபதி அம்மன் கோயில்’ என்று சொல்வதிலிருந்து தெரிகிறது.

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2 


Reviews
There are no reviews yet.