நவீன இந்திய வரலாறு குறித்து சேஜ் இந்தியா வெளியிட்டு வரும் தொடர் நூல் வரிசையில் ஒன்று Nandanar’s Children : The Paraiyans’ Tryst with Destiny, Tamil Nadu 1850–1956. கொல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராஜ் சேகர் பாசு எழுதிய இந்நூலின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. மொழிபெயர்த்திருப்பவர், அ. குமரேசன். நூலின் தலைப்பு, நந்தனின் பிள்ளைகள்: பறையர் வரலாறு 1850-1956. மிக முக்கியமான இந்த ஆய்வு நூல் ஆறு நீண்ட அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது.
1) 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பறையர்களும் வேளாள் அடிமைத்தனமும்
2) தென் இந்தியாவின் ‘பறையர்’ பிரச்சினையில் மிஷனரிகளின் செயல்பாடுகள்
3) 19, 20ம் நூற்றாண்டுகளில் தமிழ் பறையர்களின் வெளிநாட்டு முயற்சிகளும் உள்நாட்டு இடப்பெயர்ச்சிகளும்
4) அரசியல் அதிகாரத்தை நோக்கி பறையர்கள்
5) தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் அரசியல்
6) தமிழ்நாட்டில் அரசியல் அணிகளும் பிளவுபட்ட ஆதி திராவிடர் அரசியலும். தமிழக அரசியல் குறித்தும் சாதி அரசியல் குறித்தும் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருப்பவர்கள் அனைவருக்குமான நூல் இது.
Reviews
There are no reviews yet.